உயர்பதவிக்கான நேர்முக தேர்வில் வெற்றி பெறுவது எப்படி?

Negative feedback can actually benefit employees, says a study

by SAM ASIR, Jun 22, 2019, 16:43 PM IST

வாழ்க்கையில் உயரவேண்டும் என்பது எல்லோருக்கும் இருக்கவேண்டிய ஓர் ஆசை.

பின்னாளில் நாம் யாராக திகழ வேண்டும் என்ற இலக்கு கண்டிப்பாக மனதில் இருக்கும். முதன்முதலாக ஏதாவது ஓர் அலுவலகத்தில் பணிக்குச் சேர்ந்து வேலையை கற்றுக்கொண்ட பின்னர், அதே துறையில் அல்லது அதற்கொத்த துறையில் உயர்வது எளிதாகிவிடும். எந்தெந்த பணிகளை எப்படி முடிக்கவேண்டும்? அவற்றில் கடினமாக சவால்களை எதிர்கொள்வது எப்படி? வேலையை விரைவாக முடிப்பது எப்படி? என்பது குறித்த அனுபவங்கள் கிடைத்திருக்கும். வேறு நிறுவனங்களில் இப்போது பணிபுரிவதை விட உயர்ந்த பணியிடத்துக்கு விண்ணப்பிக்க ஆரம்பிப்போம். அதுபோன்ற நேர்முக தேர்வை எதிர்கொள்ள உதவும் சில குறிப்புகள்:

மனதை படியுங்கள்:

இண்டர்வியூ என்னும் நேர்முக தேர்வு என்பது, நேர்முக தேர்வு நடத்துபவர்கள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் ஏதாவது ஒரு பதிலை கூறுவது அல்ல என்பதை முதலில் உணர்ந்துகொள்ள வேண்டும். தேர்வாளரின் அல்லது தேர்வு குழுவினரின் மனங்களில் என்ன உள்ளது? அவர்கள் நம்மிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை புரிந்துகொள்வது அவசியம். தங்கள் நிறுவனத்துக்கு நாம் பொருத்தமான நபரா என்று கண்டுபிடிப்பதே அவர்களது முக்கியமான நோக்கமாக இருக்கும்.

ஈடுபாட்டை வெளிப்படுத்துங்கள்:

விண்ணப்பித்திருக்கும் வேலைமீது உங்களுக்கு ஈடுபாடு உள்ளது என்பதை உரையாடலில் வெணிப்படுத்த வேண்டும். நேர்முக தேர்வில் நீங்கள் தேர்வு பெற்றால் புதிய பணியில் இணைய தயங்கமாட்டீர்கள் என்பதை அவர்கள் உணரும் விதமாக நீங்கள் பேசவேண்டும். ஏதோ ஒரு வேலை வேண்டும் என்று அல்ல; இந்தப் பணியில் சேர்வதை விரும்பியே தேர்வுக்கு வந்திருப்பதை உணர்த்தும் வண்ணம் முழு ஈடுபாட்டுடன் தேர்வில் பதில் அளிக்க வேண்டும். தேர்வு செய்யப்பட்டால் இவர் பணியில் சேருவாரா, மாட்டாரா? என்ற ஐயம் தோன்றாதவண்ணம் நடந்துகொள்ளவேண்டும்.

ஆயத்தமாகி செல்லுங்கள்

நேர்முக தேர்வுக்குச் செல்லும் நிறுவனத்தைப் பற்றிய விவரங்களை சற்று விரிவாக தெரிந்துகொள்வது அவசியம். அந்நிறுவனத்தின் முந்தைய தொழில் அல்லது வணிக சாதனைகள், நோக்கங்கள், நிறுவனத்தின் தலைவர்கள் பற்றிய அறிந்திருப்பது நிச்சயம் பலனளிக்கும். அது நீங்கள் ஏற்கனவே நேர்முக தேர்வுக்காக நேரம் எடுத்து ஆயத்தமாகியிருப்பதை காட்டும்.

கேள்வி கேளுங்கள்:

இப்போது இருப்பதை காட்டிலும் அடுத்த உயர்நிலை பதவிகளுக்கான நேர்முக தேர்வுக்குச் செல்லும்போது, கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிப்பது மட்டும் போதுமானதல்ல. "நான் என் குழுவின் (team) திறனை என்னென்ன விதத்தில் அதிகரிக்க முடியும்?" என்பது போன்ற கேள்விகளை நீங்கள் கேட்கலாம். அதுபோன்ற கேள்விகள், நீங்கள் குழுவில் இணைந்து பணியாற்றக்கூடியவர் என்பதையும், வேலையை செய்துமுடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் என்பதையும் தேர்வாளர்களுக்கு உணர்த்தும். தேர்வாளர் உங்கள் கேள்விக்கு பதில் கூறிய பின்னர், அந்நிறுவனத்தின் குறிப்பிட்ட குழுவை வலுப்படுத்தக்கூடிய உங்கள் குறிப்பிட்ட திறன்கள், தொழில்முறை சாதனைகள் மற்றும் இலக்குகள் குறித்து நீங்கள் விளக்கலாம்.

திறன்களை விளக்குங்கள்:

உங்கள் தனிப்பட்ட வேலைதிறன், அனுபவம் பற்றி பேசுவதன் மூலம் தேர்வு நடத்தப்படும் பொறுப்புக்கு தாங்கள் எவ்விதத்தில் பொருத்தமானவர் என்பதை நிரூபிக்க இயலும். இப்புதிய வாய்ப்பில் நீங்கள் கற்றுக்கொள்ளக்கூடியவை குறித்து, உங்கள் மனதில் இருக்கும் இலக்குகளோடு இப்பணி பொருந்திபோவது குறித்த உங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ளலாம்.

ஏற்றுக்கொள்ளுங்கள்

கேள்விகள் தொடர்ந்து, தேர்வு நிறைவு கட்டத்தை எட்டும்போது, "எனக்கு ஏதாவது ஆலோசனை கூறுங்கள்?" என்று தேர்வாளர்களிடம் கேளுங்கள். இப்படி ஆலோசனை கேட்பதன் மூலம், நீங்கள் உங்கள் வேலை பற்றிய விமர்சனத்திற்கு திறந்தமனதுடையவராய் இருக்கிறீர்கள் என்பதை உணர்த்தமுடியும். எளிதில்அணுகக்கூடியவர் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். தேர்வாளர்கள் ஆலோசனைகள் மற்றும் கருத்துகள் கூறினால் அதை நேர்மறை எண்ணத்தோடு ஏற்றுக்கொள்ளுங்கள்.

எதிர்மறையாக பேசாதீர்கள்

ஒருவேளை நீங்கள் தற்போது பணிபுரியும் நிறுவனம் அல்லது முன்பு பணிபுரிந்த நிறுவனங்கள் பற்றி பேச்சு எழுந்தால், ஒருபோதும் நிறுவனம் அல்லது நிர்வாகம் பற்றி எதிர்மறையான கருத்துகளை பேசாதீர்கள். தங்களைப்போன்று இன்னொரு நிர்வாகம் பற்றி குறைகூறக்கூடியவரை ஒருபோதும் நிர்வாகிகள் விரும்புவதில்லை. முடிந்தவரையில் நேர்மறையான எண்ணங்களை மட்டுமே பகிர்ந்துகொள்ளுங்கள்.

நன்றி கூறுங்கள்

நன்றியுணர்வோடு இருப்பது எப்போது அவசியம். உங்கள்மீது அது நல்ல எண்ணத்தையும் ஏற்படுத்தும். தேர்வாளர் அல்லது தேர்வு குழுவினர் உங்களோடு நேரம் செலவழித்தற்காக அவர்களுக்கு நன்றி கூறுங்கள். அவர்களை சந்திக்க முயன்றது உங்களுக்கு சந்தோஷமளித்தது என்று கூறுங்கள். விடைபெறும்போது, உங்களோடு அவர் கைகுலுக்கினால், முகத்திற்கு நேராக பார்த்து, புன்னகையுடன் சற்று இறுக்கமாக கைப்பற்றி குலுக்கி விடைபெறுங்கள்.

சிறந்த பணி கிடைக்க வாழ்த்துகள்!

இயக்குநர் பா.ரஞ்சித் கைதாவாரா? தடையை நீடிக்க உயர்நீதிமன்ற கிளை மறுப்பு

You'r reading உயர்பதவிக்கான நேர்முக தேர்வில் வெற்றி பெறுவது எப்படி? Originally posted on The Subeditor Tamil

More Lifestyle News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை