ஸொமட்டோவை இவர் எப்படி யூஸ் பண்ணியிருக்கார் பாருங்க!

by SAM ASIR, Aug 17, 2019, 19:30 PM IST

நாம் பசித்தால் உபேர்ஈட்ஸ், ஸ்விக்கி, ஸொமட்டோ போன்ற உணவு டெலிவரி செய்யும் செயலிகளின் சேவையை பயன்படுத்துகிறோம். ஹைதராபாத்தில் ஒருவர் இன்னொரு வேலைக்கும் ஸொமட்டோவை பயன்படுத்தியுள்ளார். கடந்த வாரம் முதல் இவரது பதிவுதான் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஹைதராபாத்தை சேர்ந்தவர் ஓபேஷ் கோமிசிரிஷெட்டி. ஒரு நாள் இரவு 11:50 மணிக்கு இன்ஆர்பிட் மால் சாலை என்ற இடத்திலிருந்து தான் தங்கியிருக்கும் அறைக்குச் செல்வதற்கு ஆட்டோ தேடியுள்ளார் ஓபேஷ். ஆட்டோ கிடைக்காத நிலையில் செயலி மூலம் வாகனம் ஏதாவது கிடைக்குமா என்று தேடியுள்ளார். கார் வாடகை ரூ.300/- என்ற அளவில் அதிகமாக இருந்துள்ளது.

அந்த சமயம் ஓபேஷூக்கு பசியெடுக்க ஆரம்பித்துள்ளது. பசி நேரத்தில் அவருக்கு வித்தியாசமான ஐடியா உதித்துள்ளது. ஸொமட்டோ செயலியில், தான் நின்று கொண்டிருந்த பகுதியிலுள்ள உணவகத்தை தேடியுள்ளார். 'தோசை பந்தி'என்ற கடையில் முட்டை தோசை ஆர்டர் செய்துள்ளார். தோசை டெலிவரி செய்யப்பட வேண்டிய இடமாக, தாம் தங்கியிருக்கும் அறையின் முகவரியை கொடுத்துள்ளார்.

உணவகத்தில் தோசை வாங்க வந்த ஸொமட்டோ பணியாளரை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, குறிப்பிட்ட ஆர்டர் தன்னுடையதுதான் எனவும், தன்னை அறையில் இறக்கி விட்டுவிடும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார். ஸொமட்டோ பணியாளர், அதற்கு சம்மதித்து ஓபேஷை அவரது அறையில் இறக்கி விட்டு, தனக்கு ஃபைப் ஸ்டார் ரேட்டிங் அளிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த சம்பவத்தை ஓபேஷ் கோமிசிரிஷெட்டி தமது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதை நூற்றுக்கணக்கானோர் 'லைக்' செய்துள்ளர். ஆகஸ்ட் 7ம் தேதி, ஓபேஷ், ட்விட்டரில் செய்த பதிவுக்கு ஸொமட்டோ சேவை பிரிவு, 'நவீன பிரச்னைகளுக்கு நவீனமான தீர்வுகள்தான் தேவை' என்று பின்னூட்டமளித்துள்ளது.
எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க, பாருங்க!

READ MORE ABOUT :

Leave a reply