செய்கூலி சேதாரம் இல்லாமல் ஆண்டுக்கு 2.5% வட்டியுடன் தங்கம் - முதலீட்டுக்கான இந்த திட்டம் பற்றி அறிந்துகொள்ளுங்கள்

இந்தியாவில் தங்கத்தின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நேரடியாகத் தங்கம் வாங்குவதைத் தவிர்க்கவும் மற்றும் அந்த பணத்தை அரசு நிறுவனங்களில் முதலீடு செய்யவும் மத்திய அரசு ஒரு திட்டத்தைக் கடந்த 2015 ம் ஆண்டு கொண்டு வந்தது தங்கப்பத்திரம் வெளியீடு.

தங்கப்பத்திரம் என்பது ஒவ்வொரு நிதியாண்டிலும் RBI ( Reserve Bank of India ) பல கட்டங்களாகத் தங்கத்தின் மதிப்பை நிர்ணயம் செய்து அதற்கான பத்திரத்தை வெளியிடும் . தனி நபர் முதல் சிறு வணிகர்கள் வரை இதில் முதலீடு செய்யலாம்.

இந்த தங்கப்பத்திரத்தைத் தபால் நிலையம் , RBI , மும்பை பங்குச் சந்தை , தேசிய பங்குச் சந்தை மற்றும் SHCIL போன்ற இடங்களிலும் , இணைய வழி மூலமாகவும் பதிவு செய்து பெறலாம் .முதலீடு செய்யப்படும் தொகைக்கேற்ப பத்திரம் அளிக்கப்படும். அந்த தொகைக்கு ஆண்டுக்கு 2.5 % வட்டி கிடைக்கும். தங்க பத்திரமாக முதலீடு செய்வதால் செய்கூலி , சேதாரம் இல்லாமல் வாங்கலாம் .

எவ்வளவு வாங்கலாம்?

ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 1 கிராம் முதல் அதிகபட்சமாக 4 கிலோ வரை முதலீடு செய்யலாம்.

இதற்கான முதிர்வு காலம் 8 ஆண்டுகள் ஆனால் 5 ஆண்டுகளுக்குப் பிறகு முடித்துக் கொள்ளும் வாய்ப்பும் உண்டு .

2020-2021 ம் நிதியாண்டின் ஆறாம் கட்ட தங்க பத்திரம் ஆகஸ்ட் 31 ல் வெளியிடப்பட்டுள்ளது .ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 5,117 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த தங்கப்பத்திரத்தை இணைய வழியில் விண்ணப்பத்து பெறுவோர்க்குக் கிராமிற்கு 50 ரூபாய் தள்ளுபடியும் தெரிவித்துள்ளது RBI.

கடந்த 2019-2020 நிதியாண்டில் 10 கட்டங்களாக விற்பனை செய்யப்பட்ட தங்கப் பத்திரங்களின் மதிப்பு ரூபாய் 2367.13 கோடி சுமார் 6. 13 டன் நகைக்கு நிகரானது .

இந்த திட்டம் செப்டம்பர் 4ல் முடிவடைய உள்ளது.

Advertisement
மேலும் செய்திகள்
what-are-the-benefits-in-adding-ghee-in-rice
தினமும் சாப்பாட்டில் நெய் கலந்து கொள்வதால் என்ன நன்மைகள்? வாங்க பார்க்கலாம்..
women-can-get-corona-vaccines-even-during-menstruation
மாதவிடாய் காலத்தில் பெண்கள் கொரோனா தடுப்பூசி போடலாமா..? கூடாதா…?
what-are-the-benefits-of-using-some-kitchen-ingridents-in-tamil
வீட்டின் சமையலறையில் இருக்கும் பொருள்களை வைத்து ஃபேஷியல் செய்வது எப்படி??
what-are-the-disadvantage-for-girl-while-eating-red-meat
பெண்கள் ஏன் அதிகமாக இறைச்சி எடுத்துக்க கூடாது தெரியுமா?? வாங்க தெரிந்து கொள்ளலாம்..
relationship-these-are-the-most-googled-questions-about-sex
பாலியல் உறவு குறித்து கூகுள் இணையத்தில் தேடப்பட்ட அதிக கேள்விகள்
details-about-world-virus-impact
விலங்கியல் நோய்களால் 3.25 கோடி மக்கள் உயிரிழப்பு... என்னதான் தீர்வு?!
what-are-the-benefits-in-child-growth
குழந்தைகள் உயரமாக வளர இந்த டிப்ஸ்யை பயன்படுத்துங்கள்..
how-to-cure-belly-in-tamil
இனி தொப்பையை குறைப்பது வெரி ஈஸி!! இதை செய்தால் மட்டும் போதுமாம்..
what-are-the-benefits-of-drinking-beetroot-juice
தினமும் பீட்ருட் சாறு குடிப்பதால் உடலுக்கு எவ்வகை ஆரோக்கியம் கிடைக்கும்??
what-are-the-symptoms-of-corona-virus
இந்த அறிகுறி இருந்தால் கண்டிப்பாக உங்களுக்கு அந்த நோய் தான்!! நூறு சதவீதம் உறுதி..

READ MORE ABOUT :