பாதுகாப்பான செல்போன் பயன்பாடு நாட்டுக்கும் வீட்டுக்கும் தேவை!

by Rahini A, Mar 20, 2018, 09:22 AM IST

பாதுகாப்பான செல்போன் பயன்பாடுக்கு மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில்,

1) செல்போனை நீண்ட நேரம் கையில் வைத்திருப்பதால் கைகளின் வழியே கதிர்வீச்சு பாதிப்புக்கு நாம் உள்ளாகலாம். அதனால், கையிலேயே வைத்திருப்பதற்குப் பதிலாக பலகை, மேஜை போன்ற கடினமான மேற்பரப்பின் மீது வைத்து ஒரு கையாலேயே டைப்பிங், சாட்டிங் என செய்யலாம்.

2) எப்போதும் உங்கள் மொபைல்போனை 7 முதல் 10 இன்ச் வரை தள்ளியே வைத்திருங்கள். மொபைலில் சிக்னல் இருக்கும்போது எல்லாம் கதீர்வீச்சு அபாயம் இருந்துகொண்டேதான் இருக்கும். அதனால், கைகளிலும், உங்களது சட்டைப் பையிலும் மொபைல் போனை வைப்பதற்கு பதிலாக உங்களது பர்ஸ், கைப்பை என மொபைலுக்கான இடத்தை மாற்றுங்கள்.

3) பயணங்களின் போது மொபைல் பயன்படுத்துவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால், பயணங்களின் போது சிக்னல் கிடைப்பது கூடுதல் குறையாக என மாறும். இதனால் கதீர்வீச்சு அபாயமும் அதிகம்.

4) மொபைல் போனை நேரடியாகக் காதில் வைத்துப் பேசுவதைவிட ஒரு நல்ல தரமான ஹெட்செட் மூலம் பேசலாம். ஹெட்போன் மூலம் பேசும்போதும் மொபைல் போனை கையில் பிடித்திருக்காமல் பக்கத்திலிருக்கும் நாற்காலியிலோ, எதிரில் இருக்கும் மேஜையிலோ வைத்துப் பேசுவது ரொம்ப நல்லது.

5) உங்களுக்கு மொபைல்போன் தேவைப்படாத போதெல்லாம் ஏர்ப்ளேன் மோடி ஆப்ஷனில் வைத்துவிடுங்கள். குறிப்பாக, நீங்கள் தூங்கும்போது. இது எல்லாவித கதிர்வீச்சு அபாயங்களுக்கும் குட் பய் சொல்லிவிடும்.

You'r reading பாதுகாப்பான செல்போன் பயன்பாடு நாட்டுக்கும் வீட்டுக்கும் தேவை! Originally posted on The Subeditor Tamil

More Lifestyle News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை