ஆரோக்கியமான கூந்தலுக்கு ஷாம்புவுடன் தண்ணீர்

Add water with shampoo long hair

by Vijayarevathy N, Oct 13, 2018, 20:43 PM IST

வெளியில் போகிறவர்களுக்கு கோடை காலத்தில், கூந்தல், வைக்கோலைப் போல் உலர்ந்து விடும். எவ்வளவுதான் எண்ணெய் தடவினாலும் போதாது. இப்படி இருந்தால், வாரத்திற்கு ஒரு தடவை காய்ச்சிய எண்ணெயை, தலையில் நன்றாகத் தேய்த்து, ஒரு மணி நேரம் ஊறிய பின், தலைக்கு குளிக்கவும்.

ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட்டி வேர், ரோஜா இதழ்கள், சந்தனப் பொடி ஆகியவை தலா, 10 கிராம் சேர்த்து, எண்ணெயில் போட்டு கொதிக்க வைக்கவும்.

இந்த கலவையை நாலு நாள் வெயிலில் வைத்தால், சூரிய கதிர்கள் பட்டு, எண்ணெயில் எசன்ஸ் இறங்கும். பின் வெள்ளைத் துணியில், அதை வடி கட்டவும். குளிக்கும் முன் இதை தலையில் தேய்த்து வந்தால், முடி உதிர்தல், நரைமுடி குறையும். செம்பட்டை முடி கருமையாகும்; பொடுகு நீங்கும்.

தினமும் தலைக்குக் கொஞ்சம் எண்ணெய் தடவி வர வேண்டும். அது, தேங்காய் எண்ணெயாக இருந்தால் நல்லது. எண்ணெய் தடவும் போது, விரல்களின் நுனியால் தலையில் அழுத்திப் பிடித்து விட்டுத் தேய்க்க வேண்டும். அப்படிச் செய்தால், கூந்தல், எண்ணெய் பசையுடன் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

வெந்தயத்தை விழுதாக அரைத்து, தலையில் தடவி ஊறவிட்டு, பின்னர் எலுமிச்சை சாறு கலந்த நீரில் குளிக்கவும். இது, குளிர்ச்சியை ஏற்படுத்தும். செம்பருத்தி பூக்களை பசை போல அரைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை தலையில் தடவி பின்னர் அலசவும்.


சாதம் வடித்த நீருடன் சீகைக்காய் கலந்து. அதைக் கொண்டு முடியை தேய்த்து விட்டால், முடி பளபளக்கும்.


பலசரக்குக் கடையில் காய்ந்த வேப்பம்பூ கிடைக்கும். உப்பு கலக்காத வேப்பம்பூ, 50 கிராம் வாங்கி, அதை, 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும்.


இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாக தேய்த்து, அரை மணி நேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும். அதிகம் பொடுகு உள்ளவர்கள் வாரத்திற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ மூன்று வாரங்கள் குளித்தால், பொடுகு சுத்தமாக நீங்கி விடும்.


வெந்தயம், வால் மிளகு, சீரகம் மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து, தேங்காய் எண்ணெயில் கலந்து தடவி வர, இளநரை மறையும். கூந்தலுக்கு எப்போதும் எண்ணெய் பசையும், நீர்ச் சத்தும் அதிகமாகத் தேவைப்படுகிறது. ஹென்னா பயன்படுத்தி, நரை முடி தெரியாமல் பார்த்துக் கொள்ளலாம். ஹென்னா பயன்படுத்தும் போது, முறையான பயிற்சி வேண்டும்.

ஷாம்பூ அடிக்கடி பயன்படுத்தக் கூடாது. அப்படி பயன்படுத்தும் போது, ஒரு கோப்பை தண்ணீரில் ஷாம்பூவைக் கலந்து, பின்பு பயன்படுத்த வேண்டும்.

You'r reading ஆரோக்கியமான கூந்தலுக்கு ஷாம்புவுடன் தண்ணீர் Originally posted on The Subeditor Tamil

More Lifestyle News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை