சிலருக்கு முகம் வெண்மையாக இருக்கும் ஆனால் உதடு மட்டும் கருப்பாக தெரியும். எவ்வளவு முயன்றாலும் கருமை போகாது. இங்கு கொடுக்கப்பட்ட குறிப்புகள் முழுமையான பலனைத் தரும்.
சரி குறிப்புகளைப் பார்ப்போமா!
பீட்ரூட் சாறு அல்லது புதினா இலைசாறு அல்லது மாதுளை சாறு எடுத்து உதடுகளில் பூசி வர உதடுகள் சிவப்பாக மாறிவிடும்.
எலுமிச்சை சாறு மற்றும் உப்பு கலந்து அல்லது புதினா இலையை காய வைத்து அதனை தூளாக்கி இத்தூளில் பல் தேய்த்தால் பற்கள் பளிச்சென்று இருக்கும்.
தேன் உதட்டில் உள்ள கருமையை போக்க உதவும்.
பாதாம், ஓட்ஸ், எலுமிச்சை சாறு மற்றும் தேன் ஆகியவற்றை நன்கு அரைத்து உதட்டில் தடவி 5 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் அலச வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் உதட்டில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, உதடு பொலிவாக இருக்கும்.
தினமும் உதட்டிற்கு பாதாம் பால் அல்லது பாதாம் எண்ணெயை லமுறை தடவ வேண்டும். இதனால் சிகரெட் பிடிப்பதால் ஏற்படும் வறட்சியின் காரணமாக உண்டாகும் கருமை நிறத்தை மாற்றலாம்.
மாதுளை சாற்றினை தினமும் இரவில் படுக்கும்போது தடவி வந்தால், உதட்டில் உள்ள கருமையை போக்கலாம்.
எலுமிச்சை சிறந்த ப்ளீச்சிங் பொருள். இத்தகைய எலுமிச்சையின் சாற்றை மட்டும் உதட்டில் தடவி 4-5 நிமிடம் மசாஜ் செய்து, குளிர்ந்த நீரில் கழுவி, இறுதியில் லிப் பாம் போட்டுக் கொண்டால் உதட்டில் இருக்கும் கருமை மறையும்.