ஒரு முறை வாழும் வாழ்க்கை அதில் உண்மையாக இந்த மூன்று சொற்களை சரியான இடத்தில் சரியான நேரத்தில் பயன்படுதினால் போதும் வாழ்வில் எப்பொழுதும் மகிழ்ச்சி தான்.
மகிழ்ச்சியை கட்டிப்போடும் மந்திர வார்த்தைகள்:
- நன்றி
- மன்னிக்கவும்
- தயவுடன்
பெரும்பாளான மனிதர்கள் இந்த வார்த்தைகள் பயன்படுதினால் சுயமரியாதைக்கு அவமானம் என்றுநினைக்கிறார்கள், சுயமரியதை என்பது வேறு அதனை யாருக்காவும் விட்டுக்கொடுக்க கூடாது, ஆனால் நாம் வாழ்வது கூட்டு சமூகத்தில், நேரடியாக இல்லாவிட்டாலும் பலர் மறைமுகமாக நமக்கு துணை நிற்கிறார்கள் அவர்களுக்காகவும் நமக்காவும் இந்த வார்தைகளை பயன்படுத்தளாம்.
நாம் சாப்பிடும் உணவகத்தில் சாப்பிடும் போது நமக்கு பரிமாரும் பணியாளருக்கு நீங்கள் தரும் டிப்ஸ் தரும் மகிழ்சியை விட நன்றி என்ற ஒரு வார்தைக்கு மகிழ்வார்கள்,
நமக்காக வேலை செய்யும் எவருக்கும் நன்றி சொல்லலாம், அவர் பணம் வாங்கிகொண்டுதான் செய்கிறார் எதற்கு நன்றி என்று நினைப்பது தவறு நன்றி சொல்ல பழகுங்கள்.
மனித உறவையும் அல்லது வேலையையும் பணத்தினால் தீர்மானிக்க முடியாது, அதன்னால் நீஙள் சந்திக்கும் அனைவரிடமும் அன்பாக இருங்கள், முடியும் அளவிற்க்கு ஒரு புன்னகை செய்யுங்கள்.
தினமும் உங்களுக்காக சமைத்து வைக்கும் மனைவிக்கோ அல்லது அம்மாவிற்கோ ஒரு முறையவது நன்றி செல்லிப்பாருங்கள். நம்மை சுற்றி உள்ள உறவுகள் செய்யும் செயலுக்கு நமக்குப் பிடித்தவர்கள் தான் என்று நன்றி சொல்ல தேவையில்லை என்று நினைப்போம்,அவர்கள் அதையெல்லாம் எதிர்பார்க்கமாட்டர்கள் என்று சுலபமாக சொல்லிவிடுவோம் அது தவறு, நன்றி சொல்லமுடியாவிட்டாலும் பாராட்டலாம்.
வேலை செய்யுமிடத்தில் நம்மைவிடக் கீழ் பணியில் இருப்பவர்களிடம் நாம் சொல்லும் நன்றி, அவர்களின் பணி ஈடுபாட்டை அதிகரிக்கும்.
அடுத்த மந்திரம் "மன்னிக்கவும்"
தவறு என்பது மனித இயல்பு, யார் வேண்டுமானாலும் தவறு செய்வார்காள் , தவறு செய்வது மிகப்பிரிய குற்றம் இல்லை செய்த தவறுக்கு வருந்துகிறோமா என்பதில் தான் இருக்கிறது. "நான் செய்வதில் தவறே நிகழாது’ என்கிற எண்ணமோ அல்லது, இதில் மன்னிப்புக் கேட்க என்ன இருக்கிறது ? என்கிற எண்ணமோ ஏதோ ஒன்று நம்மைத் தடுத்துவிடுகிறது.
தன்னம்பிக்கையும் தைரியமும் உள்ளவர்கள் மட்டும் தான் தாங்கள் செய்தத தவறுக்கு மன்னிப்புக் கேட்கிறார்கள், அதேபோன்று தைரியமும், தன்னம்பிக்கையும் உள்ளவர்கள் அறியாமல் பிறர் செய்யும் தவறுகளை மன்னிக்கிறார்கள்.
மூன்றாவது மந்திரம் "தயவுடன்"
ஒருவர் செய்யும் தவறினைச் சுட்டிக் காட்டும் போது அல்லது ஒரு வேலையை செய்ய சொல்லும்போது தயவுடன் என்ற சொல்லைச் சேர்த்து சொல்வதில் உங்கள் உயரிய குணம் தெரியும் , ஒரு வேலையை செய்ய முடியதவர்கள் கூட நீங்கள் கேட்க்கும் விததில் செய்ய நினைப்பார்கள்.
சாலைகளில் சில நேரங்களில் நடைபெறும் சண்டையின் போது சாரி என்ற ஒன்றை வார்த்தையும் இருபக்கமும் கோபம் அடங்குகிறது , அதை யார் சொல்வார்கள் என்ற ஈ.கோவில் காத்திருக்காமல் நல்ல மற்றத்தை உங்களிடமிருந்தே தொடங்களாம். இதுபோல் சின்ன சின்ன வார்த்தைகள் உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் இருக்க வைக்கும்.