மதுரை அரசு மருத்துவமனையில் நாய்க்கடியால் பரவும் ரேபிஸ் கிருமியால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் சடலங்கள் பாதுகாப்பற்ற முறையில் அகற்றப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 70 வயதான தனலட்சுமி என்பவர் நாய்க்கடிக்கு உரிய சிகிச்சை எடுக்காததால் ரேபிஸ் தாக்கிய நிலையில் நேற்று மாலை இறந்தார். அவரது சடலம் எவ்வித கிருமி நாசினி பாதுகாப்புமின்றி வாகனத்தில் எடுத்துச்செல்லப்படும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ரேபிஸ் கிருமியால் பாதிக்கப்பட்டவர்கள் பிறரை கடிப்பதாலும், அவரது உமிழ்நீர், ரத்தம் உள்ளிட்டவை பிறர் மீது பட்டாலோ அவர்களுக்கும் ரேபிஸ் பரவும் அபாயம் உள்ளது. மேலும் ரேபிஸ் கிருமி காற்றின் மூலம் பிறருக்கு பரவும் அபாயத்தன்மை உடையது. எனவே ரேபிஸ் தாக்கி பலியானவர்களின் உடலை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வேண்டும்.
அதனால் குடும்பத்தினரிடம் கூட சடலம் ஒப்படைக்கப்படாது ஆனால் மதுரை அரசு மருத்துவமனையில் சமீப காலமாக சடலங்களை அகற்ற போதுமான பாதுகாப்பு உபகரணங்களை மருத்துவமனை நிர்வாகம் வழங்குவது இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.