குளிர்பானத்தில் மயக்கமருந்து பலருக்கு சப்ளை - கணவன் மனைவியின் கொடூர செயலால் பாழான சிறுமி

by Sasitharan, Mar 12, 2019, 18:44 PM IST
Share Tweet Whatsapp

கணவன் மனைவியின் பாலியல் கொடுமைக்கு சிறுமி ஒருவர் ஆளானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடியில் உள்ள காமராஜ் நகரைச் சேர்ந்த தம்பதியினர் கோபி மற்றும் விஜயலட்சுமி. இவர்கள் அப்பகுதியில் கூலி வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் அவர்களின் வீட்டின் அருகில் சிறுமி (பெயர் குறிப்பிடப்படவில்லை) ஒருவர் வசித்து வந்துள்ளார். அச்சிறுமி, அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இச்சிறுமியை ஆசை தீர்த்துக் கொள்ள நினைத்த கோபி அவரின் மனைவியின் உதவியுடன் அவரை கடந்த அக்டோபர் மாதம் முதல் அவரின் வீட்டிற்கு வரவழைத்தார். முதலில் நன்றாகப் பழகி அச்சிறுமியைப் பொய்யான அவர்களின் பாசத்திற்குக் கொண்டு வந்தனர்.

அவர்களின் பாசம் உண்மையென நம்பிய சிறுமி அவர்களுடன் வீட்டில் ஒருவரானார். இதனை அவர்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட கோபி, அவரின் மனையின் உதவியுடன் சிறுமிக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தைக் கொடுத்தார் .இதனை அறியாத சிறுமி அதனை அருந்தினார். இதன் பின்பு மயக்கமடைந்த சிறுமியை, விஜயலட்சுமியின் கணவர் கோபி பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனைச் சிறுமி, சமீபத்தில் அக்கம் பக்கத்தினரிடம் கூறியுள்ளார். அவர்கள், இந்த தகவலை சிறுமியின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர், கோபி மற்றும் விஜயலட்சுமி ஆகிய இருவரையும் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று புகார் செய்தனர். அத்தம்பதியினரை அழைத்து வந்து சப்-இன்ஸ்பெக்டர் தீபா தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அவர்கள் சிறுமியை அழைத்து வந்து பலமுறை மயக்க மருந்தைக் குளிர்பானத்தில் கொடுத்து, பலருக்குச் சிறுமியை பாலியல் கொடுமைக்குத் தள்ளியுள்ளனர் எனத் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின்றன.

இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட பலரும் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்த நிலையில், கோபி அவரது மனைவி விஜயலட்சுமி இருவரையும் கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இதனால், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


Leave a reply