பாகிஸ்தானின் 22-ஆவது பிரதமராக பதவியேற்றார் இம்ரான் கான்

பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றார் இம்ரான் கான்

Aug 18, 2018, 15:18 PM IST

முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராக இன்று பதவியேற்றார். அவருக்கு அந்நாட்டு குடியரசுத்தலைவர் மம்னூன் உசேன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

Imran Khan

முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் அதிகப்படியான இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. சிறிய கட்சிகளின் ஆதரவுடன் அக் கட்சிக்கு இருந்தது.

இந்நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டம் நேற்று நடந்தது, அதில் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காகன முடிவு எடுக்கப்பட்டது. கூட்டத்தில் வாக்கெடுப்பு நடந்தது. பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கானும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் ஷாபாஸ் ஷெரீப்பும் போட்டியிட்டனர்.

இந்த வாக்கெடுப்பில், 176 வாக்குகளைப் பெற்று, இம்ரான் கான் வெற்றி பெற்று பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஷாபாஸ் ஷெரீப் 96 வாக்குகள் மட்டுமே பெற்றார். இந்த வாக்கெடுப்பில் பாகிஸ்தான் மக்கள் கட்சி பங்குபெறவில்லை.

இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டு குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இதில், பாகிஸ்தானின் 22-ஆவது பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் மம்னூன் உசேன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

You'r reading பாகிஸ்தானின் 22-ஆவது பிரதமராக பதவியேற்றார் இம்ரான் கான் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை