கமல்ஹாசனின் மக்கள் நீதி மயயத்துக்கு பேட்டரி டார்ச் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுவையில் மொத்தம் 40 லோக்சபா தொகுதிகளிலும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடுகிறது. இத்தேர்தலில் இதுவரை எந்த கட்சியுடனும் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்கவில்லை.
தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் 40 தொகுதிகளிலும் அக்கட்சியின் வேட்பாளர்கள் பேட்டரி டார்ச் சின்னத்தில் போட்டியிடுவார்கள்.
இதற்கு நன்றி தெரிவித்து கமல்ஹாசன் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு “பேட்டரி டார்ச்” சின்னம் ஒதுக்கிய தேர்தல் ஆணையத்திற்கு நன்றி. பொருத்தமான சின்னம் தான். @maiamofficial தமிழ்நாட்டிற்கும் இந்திய அரசியலுக்கும் ஒளி தரும் புது விளக்காய் இன்று முதல் மிளிரும்.
இவ்வாறு கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.