காஷ்மீர் நாளிதழ்களின் முதல் பக்கம் வெற்றிடம் - அரசு விளம்பரத்தை நிறுத்தியதற்கு எதிர்ப்பு

protest against Jk govt, Kashmir dailies publish front page blank

by Nagaraj, Mar 10, 2019, 12:56 PM IST

காஷ்மீர் மாநிலத்தில் இன்று வெளியான நாளிதழ்களின் முதல் பக்கத்தில் செய்திகள் எதுவுமின்றி வெற்றிடமாக வெளியானது.

அரசு விளம்பரத்தை திடீரென நிறுத்தியதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்த நூதன எதிர்ப்பை நாளிதழ்கள் வெளிப்படுத்தியுள்ளன.

காஷ்மீரில் விற்பனையில் முன்னிலையில் உள்ள காஷ்மீர் ரீடர், கிரேட்டர் காஷ்மீர் ஆகிய இரு ஆங்கில நாளிதழ்களுக்கான விளம்பரங்களை ஜம்மு காஷ்மீர் மாநில அரசு திடீரென நிறுத்திவிட்டது.

எந்த வித அதிகாரப்பூர்வ உத்தரவும், காரணமும் தெரிவிக்காமல் வாய்மொழி உத்தரவு மூலம் விளம்பரங்களை நிறுத்தி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவித்த காஷ்மீர் எடிட்டர்ஸ் கில்டு, பத்திரிகைகளின் சுதந்திரத்தை மாநில அரசு பறிப்பதாகவும், விளம்பர வருமானத்தை திட்டமிட்டு தடுப்பதாகவும் குற்றம் சாட்டியது.

காஷ்மீர் மாநில அரசுக்கு எதிர்ப்பை காட்டும் வகையில் இன்று காஷ்மீரில் வெளியான நாளிதழ்கள் அனைத்தும் முதல் பக்கத்தில் செய்திகள் ஏதுமின்றி வெற்றிடமாக்கி பிரசுரித்தன.

மேலும் அனைத்து நாளிதழ்களின் நிர்வாகிகள், ஊழியர்கள் அனைவரும் ஸ்ரீநகரில் இன்று கண்டனப் பேரணியும் நடத்தினர்.

You'r reading காஷ்மீர் நாளிதழ்களின் முதல் பக்கம் வெற்றிடம் - அரசு விளம்பரத்தை நிறுத்தியதற்கு எதிர்ப்பு Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை