இரட்டை இலைச் சின்னம் வழக்கு - தினகரனின் மேல் முறையீட்டு மனுவை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

Two leaves case, SC hearing dinakaran petition on march 15

by Nagaraj, Mar 11, 2019, 11:40 AM IST

இரட்டை இலைச் சின்னத்தை ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையிலான அதிமுகவுக்கு வழங்கியதை எதிர்த்து தினகரன் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம் வரும் 15-ந் தேதி விசாரணை நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் தினகரன் தொடர்ந்த வழக்கில், ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையிலான அதிமுகவுக்கு சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது செல்லும் என கடந்த மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது. தினகரனின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து தினகரன் உச்ச நீதின்றத்தில் கடந்த வெள்ளியன்று மேல் முறையீடு செய்து, அவசர வழக்காக விசாரிக்குமாறு கோரியிருந்தார்.

இன்று இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்றும், பட்டியலிட்டபடி வரும் 15-ந் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகக் கூறி ஒத்தி வைத்தனர். மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான நிலையில் வரும் 15-ந் தேதி உச்ச நீதிமன்றம் இரட்டை இலைச் சின்னம் வழக்கை விசாரிப்பதால் தீர்ப்பும் விரைவில் வெளியாகுமா? என்ற எதிர்பார்ப்பு அதிமுக மற்றும் தினகரன் தரப்பில் நிலவுகிறது.

You'r reading இரட்டை இலைச் சின்னம் வழக்கு - தினகரனின் மேல் முறையீட்டு மனுவை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை