மக்களவை தேர்தல்களம் சூடுபிடித்து விட்டது. ஆட்சியைக் கைப்பற்ற பாஜக - காங்கிரஸ் இடையில் கடும் போட்டி நிலவுகிறது. தேர்தல் பிரச்சாரப் பணிகளானது முழுவீச்சில் தொடங்கி நடந்து வருகிறது. ஃபேஸ் புக், ட்விட்டர் என சமூக வலைத்தளங்களிலும் பிரச்சாரம் களைக்கட்டி விட்டது என்றே சொல்லலாம்.
ரஃபேல் ஊழல் குறித்துத் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்குப் பதிலடி கொடுக்க அண்மையில், பிரதமர் மோடி தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘நானும் காவலாளி தான்' என்ற தலைப்புடன் பாஜக-வின் புதிய பிரச்சார வீடியோவை வெளியிட்டார். அதனுடன், 'காவலன் நரேந்திர மோடி’ என பெயரையும் மாற்றினார். அவ்வளவுதான், ஒருபுறம் தொண்டர்களின் புகழாரம், மறுபுறமோ `உங்களுடன் அணில் அம்பானி, நீரவ் மோடி, மல்லையா உள்ளிட்டோர் இருக்கின்றனர் மோடிஜி, காவலன் இல்லை திருடன் ' என விமர்சித்து நெட்டிசன்கள் தெறிக்கவிட்டு வருகிறனர்.
ராகுல் காந்தியும் தனது ட்வீட்டர் பக்கத்தில், 'நீங்கள் முயற்சி செய்து கொண்டே இருங்கள் மோடிஜி...உண்மை அணைக்கப்படாது. இந்திய மக்களோ காவல்காரனின் திருடன் எனக் குறிப்பிடுகிறார்கள்' எனக் கிண்டல் அடித்துள்ளார்.