தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்கள் மீது குற்ற வழக்குகள் இருந்தால் அதன் விபரங்களை பகிரங்கமாக செய்தித்தாள்கள், செய்தி தொலைக்காட்சிகளில் கட்டாயமாக விளம்பரம் செய்ய வேண்டும் என்று அறிவித்துள்ளது.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து விபரம், குடும்ப உறுப்பினர்களின் சொத்து, வருமான விபரங்கள், வழக்குகள் கிரிமினல் , ஊழல் வழக்குகள் நிலுவையில் இருந்தால் வேட்பு மனுவில் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்பது போன்ற பல கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது. அதே போன்று தேர்தல் செலவு கணக்கிலும் விலைப்பட்டியல் வெளியிட்டு அதிரடி காட்டியிருந்தது தேர்தல் ஆணையம்.
தற்போது கிரிமினல் வேட்பாளர்களுக்கு மேலும் ஒரு கிடுக்கிப்பிடி உத்தரவை பிறப்பித்து நெருக்கடி கொடுத்துள்ளது தேர்தல் ஆணையம் . தங்கள் மீது என்னென்ன வழக்கு உள்ளது. அந்த வழக்கின் தற்போதைய நிலை என்ன? என்பது குறித்த முழு விபரங்களுடன் நாளிதழ்கள், தொலைக்காட்சிகளில் விளம்பரமாக வெளியிட வேண்டும்.
அதுவும் வழக்கு உள்ள வேட்பாளர்களின் யோக்கியதையை வாக்காளர்கள் நன்கு அறிந்து கொள்ளும் வகையில் தேர்தலுக்கு 2 நாட்களுக்கு முன்பு வரை ஒன்றுக்கு மூன்று தடவை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற புது உத்தரவை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று பிறப்பித்துள்ளது.