முதல் கட்ட தேர்தலுக்காள பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைய உள்ளதால் இன்று முதல் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நாளான மே19-ந்தேதி மாலை வரை கருத்துக் கணிப்புகளை வெளியிடக்கூடாது என தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11-ந் தேதி தொடங்கி மே 19-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் பிரச்சாரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் வாக்காளர்களை ஒரு பக்கம் கவரும் முயற்சியால் ஈடுபட்டாலும், கருத்து கணிப்பு என்ற பெயரில் வாக்காளர்களை திசைதிருப்புவதும் சமீப காலமாக அதிகரித் துள்ளது. இதனால் கடைசி நேரத்தில், கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு வாக்காளர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துவதைத் . தடுக்க தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதன்படி முதல் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் முடியும் முன்பு கணிப்புகளை வெளியிடலாம். அதன் பின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு முடிவடையும் நேரம் வரை எந்தக் கருத்துக்கணிப்பும் கூடாது என்று தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.முதல் கட்ட தேர்தல் நாளை மறுதினம் (11-ந் தேதி) நிலையில் இன்று மாலை பிரச்சாரம் ஓய்கிறது.
இதனால் இன்று மாலை முதல் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நாளான மே 19-ந் தேதி மாலை வரை சுமார் 40 நாட்களுக்கு, அங்கே இவருக்கு வெற்றி வாய்ப்பு ..., இங்கே இவர் ஜெயிப்பாராம்... எந்தக் கட்சிக்கு எத்தனை இடம்... என்பது போன்ற கருத்துக் கணிப்புகளுக்கு இடமில்லை. வெளியிடவும் கூடாது என்பது தேர்தல் ஆணையத்தின் உத்தரவு.
தமிழகத்தில் திமுக, மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி -கருத்துக் கணிப்பு தகவல்