காங்கிரஸா? பாஜகவா? 18 மாநிலங்கள்.. 2 யூனியன் பிரதேசங்களுக்கான மக்களவைத் தேர்தல் நாளை தொடக்கம்!

Advertisement

நாட்டின் அடுத்த பிரதமர் யார்? என்ற கேள்விக்கு விடை சொல்லும் மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக நாளை 18 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் தொடங்குகிறது.

ஆந்திரா, தெலங்கானா, அருணாச்சல் பிரதேசம், அசாம், பீகார், சத்திஷ்கர், ஜம்மு & காஷ்மீர், மகாராஷ்ட்ரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, ஒடிசா, சிக்கிம், திரிபுரா, உத்தரபிரதேசம், உத்தரகண்ட், மேற்கு வங்கம் மற்றும் யூனியன் பிரதேசங்களான அந்தமான் நிகோபார் மற்றும் லட்சத்தீவு ஆகிய 20 இடங்களுக்கான மக்களவைத் தேர்தல் நாளை (ஏப்ரல் 11) நடக்கவுள்ளது.

நாடு முழுவதும் நாளை தொடங்கும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 91 எம்.பி. சீட்டுக்கான முதற்கட்ட மக்களவைத் தேர்தல் நாளை நடக்கிறது.

முதற்கட்ட தேர்தல் குறித்த முழு விபரம்:

அருணாச்சல பிரதேசம்:

2 மக்களவைத் தொகுதிக்கு நடைபெறவுள்ள தேர்தலில் 12 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ், பாஜக மற்றும் பிபிஏ எனப்படும் மக்கள் கட்சி அருணாச்சலம் இடையே தான் முக்கிய போட்டி நிலவுகிறது. 2202 வாக்குச்சாவடிகளில் நாளை (ஏப்ரல் 11) தேர்தல் நடக்கிறது.

ஆந்திரா:

25 மக்களவைத் தொகுதிக்கு நடைபெறவுள்ள தேர்தலில் 319 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ், பாஜக, தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், ஜனசேனா உள்ளிட்ட கட்சிகளுக்கு இடையே தான் முக்கிய போட்டி நிலவுகிறது. 45920 வாக்குச்சாவடிகளில் நாளை (ஏப்ரல் 11) தேர்தல் நடக்கிறது.

அசாம்:

5 மக்களவைத் தொகுதிக்கு நடைபெறவுள்ள தேர்தலில் 41 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ், பாஜக மற்றும் ஏஐயுடிஎஃப் உள்ளிட்ட கட்சிகளுக்கு இடையே தான் முக்கிய போட்டி நிலவுகிறது. 9574 வாக்குச்சாவடிகளில் நாளை (ஏப்ரல் 11) தேர்தல் நடக்கிறது.

பீகார்:

4 மக்களவைத் தொகுதிக்கு நடைபெறவுள்ள தேர்தலில் 44 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் + ஆர்ஜேடி, பாஜக+ஜேடியு கட்சிகளுக்கு இடையே தான் முக்கிய போட்டி நிலவுகிறது. 7486 வாக்குச்சாவடிகளில் நாளை (ஏப்ரல் 1) தேர்தல் நடக்கிறது.

சத்திஷ்கர்:

1 மக்களவைத் தொகுதிக்கு நடைபெறவுள்ள தேர்தலில் 7 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ், பாஜக மற்றும் பிஎஸ்பி உள்ளிட்ட கட்சிகளுக்கு இடையே தான் முக்கிய போட்டி நிலவுகிறது. 1878 வாக்குச்சாவடிகளில் நாளை (ஏப்ரல் 1) தேர்தல் நடக்கிறது.

ஜம்மு & காஷ்மீர்:

2 மக்களவைத் தொகுதிக்கு நடைபெறவுள்ள தேர்தலில் 33 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் + ஜேகேஎன்சி கூட்டணி, பிடிபி மற்றும் ஜேகேஎன்பிபி உள்ளிட்ட கட்சிகளுக்கு இடையே தான் முக்கிய போட்டி நிலவுகிறது. 3489 வாக்குச்சாவடிகளில் நாளை (ஏப்ரல் 1) தேர்தல் நடக்கிறது.

மகாராஷ்ட்ரா:

7 மக்களவைத் தொகுதிக்கு நடைபெறவுள்ள தேர்தலில் 122 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் + என்சிபி, பாஜக + எஸ்எஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு இடையே தான் முக்கிய போட்டி நிலவுகிறது. 14731 வாக்குச்சாவடிகளில் நாளை (ஏப்ரல் 1) தேர்தல் நடக்கிறது.

மேகாலயா:

2 மக்களவைத் தொகுதிக்கு நடைபெறவுள்ள தேர்தலில் 9 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ், பாஜக, என்பிபி + யுடிபி உள்ளிட்ட கட்சிகளுக்கு இடையே தான் முக்கிய போட்டி நிலவுகிறது. 3167 வாக்குச்சாவடிகளில் நாளை (ஏப்ரல் 1) தேர்தல் நடக்கிறது.

மணிப்பூர்:

1 மக்களவைத் தொகுதிக்கு நடைபெறவுள்ள தேர்தலில் 8 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ், பாஜக மற்றும் என்பிஎஃப் உள்ளிட்ட கட்சிகளுக்கு இடையே தான் முக்கிய போட்டி நிலவுகிறது. 1300 வாக்குச்சாவடிகளில் நாளை (ஏப்ரல் 1) தேர்தல் நடக்கிறது.

நாகாலாந்து:

1 மக்களவைத் தொகுதிக்கு நடைபெறவுள்ள தேர்தலில் 4 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். என்பிபி மற்றும் என்டிபிபி கட்சிகளுக்கு இடையே தான் முக்கிய போட்டி நிலவுகிறது. 2227 வாக்குச்சாவடிகளில் நாளை (ஏப்ரல் 1) தேர்தல் நடக்கிறது.

ஒடிசா:

4 மக்களவைத் தொகுதிக்கு நடைபெறவுள்ள தேர்தலில் 26 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ், பாஜக மற்றும் பிஜு ஜனதா தல் உள்ளிட்ட கட்சிகளுக்கு இடையே தான் முக்கிய போட்டி நிலவுகிறது. 7233 வாக்குச்சாவடிகளில் நாளை (ஏப்ரல் 1) தேர்தல் நடக்கிறது.

சிக்கிம்:

1 மக்களவைத் தொகுதிக்கு நடைபெறவுள்ள தேர்தலில் 11 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ், பாஜக, எஸ்டிஎப், ஹெச்எஸ்பி மற்றும் எஸ்கேஎம் உள்ளிட்ட கட்சிகளுக்கு இடையே தான் முக்கிய போட்டி நிலவுகிறது. 567 வாக்குச்சாவடிகளில் நாளை (ஏப்ரல் 1) தேர்தல் நடக்கிறது.

தெலங்கானா:

17 மக்களவைத் தொகுதிக்கு நடைபெறவுள்ள தேர்தலில் 443 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ், பாஜக மற்றும் டிஆர்எஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு இடையே தான் முக்கிய போட்டி நிலவுகிறது. 34603 வாக்குச்சாவடிகளில் நாளை (ஏப்ரல் 1) தேர்தல் நடக்கிறது.

திரிபுரா:

1 மக்களவைத் தொகுதிக்கு நடைபெறவுள்ள தேர்தலில் 13 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ், பாஜக, சிபிஎம் மற்றும் டிஎம்சி உள்ளிட்ட கட்சிகளுக்கு இடையே தான் முக்கிய போட்டி நிலவுகிறது. 1679 வாக்குச்சாவடிகளில் நாளை (ஏப்ரல் 1) தேர்தல் நடக்கிறது.

உத்தரபிரதேசம்:

8 மக்களவைத் தொகுதிக்கு நடைபெறவுள்ள தேர்தலில் 96 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் + பிஎஸ்பி, பாஜக, எஸ்பி மற்றும் ஆர்எல்டி உள்ளிட்ட கட்சிகளுக்கு இடையே தான் முக்கிய போட்டி நிலவுகிறது. 1300 வாக்குச்சாவடிகளில் நாளை (ஏப்ரல் 1) தேர்தல் நடக்கிறது.

உத்தரகண்ட்:

5 மக்களவைத் தொகுதிக்கு நடைபெறவுள்ள தேர்தலில் 52 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ், பாஜக மற்றும் பிஎஸ்பி உள்ளிட்ட கட்சிகளுக்கு இடையே தான் முக்கிய போட்டி நிலவுகிறது. 11235 வாக்குச்சாவடிகளில் நாளை (ஏப்ரல் 1) தேர்தல் நடக்கிறது.

மேற்கு வங்கம்:

2 மக்களவைத் தொகுதிக்கு நடைபெறவுள்ள தேர்தலில் 18 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், பாஜக மற்றும் இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளுக்கு இடையே தான் முக்கிய போட்டி நிலவுகிறது. 3844 வாக்குச்சாவடிகளில் நாளை (ஏப்ரல் 1) தேர்தல் நடக்கிறது.

அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள்:

1 மக்களவைத் தொகுதிக்கு நடைபெறவுள்ள தேர்தலில் 15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு இடையே தான் முக்கிய போட்டி நிலவுகிறது. 406 வாக்குச்சாவடிகளில் நாளை (ஏப்ரல் 1) தேர்தல் நடக்கிறது.

லட்சத்தீவு:

1 மக்களவைத் தொகுதிக்கு நடைபெறவுள்ள தேர்தலில் 6 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ், பாஜக மற்றும் என்சிபி உள்ளிட்ட கட்சிகளுக்கு இடையே தான் முக்கிய போட்டி நிலவுகிறது. 51 வாக்குச்சாவடிகளில் நாளை (ஏப்ரல் 1) தேர்தல் நடக்கிறது.

நாளை நடைபெறவுள்ள முதல் கட்ட தேர்தலில் காங்கிரஸ் கைக்கும் பாஜகவின் தாமரைக்கும் இடையே நடைபெறும் தேர்தல் யுத்தத்தில் எந்த கட்சி அதிக இடங்களை கைப்பற்றி பாராளுமன்றத்தை கைப்பற்றப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement
மேலும் செய்திகள்
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
m-k-stalin-his-first-action
திமுகவிற்கு குடைச்சல் கொடுத்தவர்களுக்கு ஸ்டாலின் “செக்”!
how-kadampur-raju-win-against-ttv-dinakaran
டிடிவி தினகரன் கடம்பூர் ராஜுவிடம் ஏன் தோற்றார்?!
traffic-ramasamy-died-due-to-illness
சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி மரணம்!
/body>