மேகாலயாவில் குடியுரிமை திருத்த மசோதா கொண்டு வந்தால், அது தன் பிணத்துக்கு மேல் தான் கொண்டு வர முடியும் என ஷில்லாங் பாஜக வேட்பாளர் சன்போர் ஷுல்லாய் கூறியுள்ளர்.
மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தால் குடியுரிமை திருத்த மசோதாவை செயல்படுத்துவோம் என பிரதமர் மோடி வாக்குறுதி அளித்துள்ளார். ஆனால், மேகாலயாவில் குடியுரிமை திருத்த மசோதா கொண்டு வந்தால், அது தன் பிணத்துக்கு மேல் தான் கொண்டு வர முடியும் என ஷில்லாங் பாஜக வேட்பாளர் சன்போர் ஷுல்லாய் கூறியுள்ளர். இதனால், பாஜகவில் உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்த மசோதா மூலம், இஸ்லாமியர்கள் அல்லாத பிற மதத்தினர் 6 ஆண்டுகள் இந்தியாவில் வசித்தாலே, இந்திய குடியுரிமையை பெறுவர். இது இஸ்லாமியர்களுக்கு எதிராக பாஜக அரசு நடத்தும் சதித்திட்டம் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் குடியுரிமை திருத்த மசோதாவை கட்டாயம் கொண்டு வருவோம் என பிரதமர் மோடி பாஜக தேர்தல் அறிக்கை மற்றும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கூறி வருகிறார்.
இந்நிலையில், மேகாலயாவின் ஷில்லாங் மக்களைவத் தொகுதி வேட்பாளர் சன்போர் ஷுல்லாய், பாஜக அரசு நாட்டில் எந்த மாநிலத்தில் வேண்டுமானால், அந்த திட்டத்தை கொண்டு வரட்டும். ஆனால், மேகாலயாவிற்கு அந்த திட்டம் தேவையில்லை. அப்படி மீறி மோடி கொண்டு வந்தால், அது தன் பிணத்துக்கு மேல் தான் கொண்டு வரப்படும். தானே தன்னை தற்கொலை செய்துக் கொள்வேன் என பகிரங்கமாக பாஜக மேலிடத்திற்கு ஷுல்லாய் மிரட்டல் விடுத்துள்ளார்.