பணப்பட்டுவாடா செய்யவே மின்வெட்டை ஏற்படுத்தும் அதிமுக – தமிழச்சி தங்கபாண்டியன் பொளேர்!

by Mari S, Apr 15, 2019, 11:34 AM IST

மின்வெட்டை ஏற்படுத்தி அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்வதாக தென் சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் அதிமுக மீது தேர்தல் பிரசாரத்தின் போது குற்றஞ்சாட்டினார்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்துக் கட்சிகளும் இறுதிகட்ட பிரசாரத்தை செய்வதைவிட தீவிரமாக பணப்பட்டுவாடா செய்து வருகின்றன. மேலும், மாற்றி மாற்றி பணப்பட்டுவாடா குற்றங்களையும் சுமத்தி வருகின்றன.

தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், மேற்கு மாம்பலம், சைதாப்பேட்டை, மேட்டுப்பாளையம் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் மத்தியில் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது, இரவு நேரங்களில் வேண்டுமென்றே கரன்ட்டை கட் பண்ணி, ஆளுங்கட்சியான அதிமுக பணப்பட்டுவாடா செய்து வருகின்றது. தேர்தல் பறக்கும் படை, ஆளுங்கட்சியை கண்டு கொள்வதே இல்லை. மக்களை இருட்டில் தள்ளி பணம் கொடுக்கும் கட்சியிடம் பணம் வாங்கிக் கொண்டு ஓட்டுப் போட்டிங்கண்ணா.. உங்க வாழ்க்கையும் இருளில் தான் மூழ்கிப் போகும் என தமிழச்சி தங்கபாண்டியன் கூறினார்.

மேலும், திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு தமிழகத்தில் ஏகபோக வரவேற்பு உள்ளது. இந்த தேர்தலில் நிச்சயம் திமுக – காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று மக்களுக்கான நல்லாட்சியை வழங்கும் எனவும் தமிழச்சி தெரிவித்தார்.

Get your business listed on our directory >> - https://directory.thesubeditor.comMore Politics News

அதிகம் படித்தவை