3ம் கட்ட மக்களவைத் தேர்தல் 570 பேர் கிரிமினல் வழக்கு வேட்பாளர்கள்

570 candidates with criminal cases in 3rd phase Election

by Mari S, Apr 20, 2019, 12:13 PM IST

3ம் கட்ட மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 1,612 வேட்பாளர்களில் 570 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. இரண்டு கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், 3ம் கட்ட மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடக்கிறது.

நாடு முழுவதிலும் உள்ள 14 மாநிலங்களில் உள்ள 115 மக்களவைத் தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடக்கிறது.

அசாம், பீகார், சத்திஷ்கர், ஜம்மு – காஷ்மீர், கர்நாடகா, மகாராஷ்ட்ரா, ஒடிசா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள சில மக்களவைத் தொகுதிகளுக்கும், குஜராத், கேரளா, தாத்ரா – நாகர்வேலி, கோவா மற்றும் டாமன் – டியூவில் உள்ள அனைத்து மக்களவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.

மொத்தமுள்ள 115 மக்களவைத் தொகுதிகளில் 1,612 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதில், 570 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன.

ADR எனப்படும் ஜனநாயக சீர்த்திருத்த சங்கம் சேகரித்த வேட்பாளர்கள் தாக்கல் செய்த மனுக்களின் படி இந்த தகவல் கிடைத்துள்ளது.
இதில், மூன்றாம் கட்ட தேர்தலில் போட்டியிடும் 90 காங்கிரஸ் வேட்பாளர்களில் 40 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. அதேபோல 97 பாஜக வேட்பாளர்களில் 38பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன.

சிபிஐ-எம் கட்சி வேட்பாளர்களில் குறைந்த அளவிலான வேட்பாளர்கள் மீதே குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன.
115 மக்களவைத் தொகுதிகளில் 63 மக்களவைத் தொகுதிகள் ரெட் அலர்ட் தொகுதிகளாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டு, அங்கு கூடுதல் பாதுகாப்புகள் போட திட்டமிடப்பட்டுள்ளன.

3ம் கட்ட மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 392 வேட்பாளர்கள் கோடீஸ்வர வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் தேவேந்திர சிங் 204 கோடி சொத்துக்களுடன் இந்த வேட்பாளர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர் போன்ஸ்லே ஸ்ரீமந்த் சத்ரபதி 199 கோடி சொத்துக்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

ஜெயபிரதா காக்கி ஜட்டி போட்டிருக்கிறார்; மோசமாக விமர்சித்த சமாஜ்வாதி வேட்பாளர் மீது வழக்குப் பதிவு

You'r reading 3ம் கட்ட மக்களவைத் தேர்தல் 570 பேர் கிரிமினல் வழக்கு வேட்பாளர்கள் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை