19 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்... தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லா மண்டபம் முகாமுக்கு தூக்கியடிப்பு

Advertisement

தமிழகம் முழுவதும் 19 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் டிஜிபியாக பணியாற்றி, சில அதிகாரிகளை மாற்றம் செய்யக் கூறி அதிரடி காட்டிய அசுதோஷ் சுக்லா மண்டபம் முகாமுக்கு தூக்கியடிக்கப்பட்டுள்ளார். அதே போல் நேரடி ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பு வழங்காதது ஏன்? என டிஜிபி டி.கே.ராஜேந்திரனுக்கு கடிதம் எழுதி பரபரப்பு ஏற்படுத்திய ஜாங்கிட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் மக்களவைத்தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் முடிவடைந்ததை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகளும் முடிவுக்கு வந்துள்ளது. தேர்தல் முடிவடைந்தவுடன் உயர் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இன்று 19 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றி உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி தொழில்நுட்ப பிரிவு டிஜிபியாக பதவி வகிக்கும் தமிழ்ச்செல்வன் மின் வாரிய டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.

போக்குவரத்து மற்றும் சாலைப்பாதுகாப்பு பிரிவு டிஜிபி கரன்சின்ஹா மாநில குற்ற ஆவணக் காப்பக டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.

சென்னை போக்குவரத்துக் கழக விஜிலன்ஸ் டிஜிபியாக இருந்த எஸ்.ஜாங்கிட் கும்பகோணம் கோட்ட போக்குவரத்துக்கழகத்தின் விஜிலன்ஸ் டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார். இவர் சமீபத்தில் டிஜிபி டி.கே.ராஜேந்திரனுக்கு, நேரடி ஐபிஎஸ் அதிகாரிகளை முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளில் நியமிக்காதது ஏன்? என்று கேட்டு கடிதம் எழுதி சர்ச்சையை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல் தேர்தல்பிரிவு டிஜிபியாக பணியாற்றிய அசுதோஷ் சுக்லா மண்டபம் அகதிகள் முகாமுக்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். இவரும் தேர்தல் நேரத்தில் சில போலீஸ் அதிகாரிகளை மாற்ற வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்து அரசுக்கு நெருக்கடி கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு பரிசாக ஒன்றும் அதிகாரமில்லாத மண்டபம் அகதிகள் முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதே போல் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி விஜயகுமார் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.

மாநில குற்ற ஆவண காப்பக ஏடிஜிபி சீமா அகர்வால் சென்னை தலைமையிட ஏடிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.

தலைமையிட ஏடிஜிபி ரவி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு ஏடிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார். ஆயுதப்படை ஏடிஜிபி முகமது ஷகீல் அக்தர் குற்றப்பிரிவு ஏடிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.
குற்றப்பிரிவு ஏடிஜிபி ஆபாஷ்குமார் சிறைத்துறை ஏடிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.

சத்தியமங்கலம் சிறப்பு அதிரடிப்படை ஏடிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் தமிழ்நாடு காவலர் சீருடைப் பணியாளர் தேர்வாணைய ஏடிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய ஏடிஜிபி சுனில் குமார் ஆவின் விஜிலென்ஸ் ஏடிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.

ஆவின் விஜிலென்ஸ் ஏடிஜிபி சங்கர் ஜுவால் ஆயுதப்படை ஏடிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார். சிறப்பு புலனாய்வு பிரிவு ஏடிஜிபி அஷோக்குமார் தாஸ் தொழில்நுட்பப்பிரிவு ஏடிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.

லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஜிபி ஜெயந்த் முரளி தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாகவும்,
காத்திருப்போர் பட்டியலிலிருந்த ஐ.ஜி செந்தாமரைக்கண்ணன் சென்னை தலைமையிட ஐஜியாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

சென்னை சிபிசிஐடி சிறப்பு பிரிவு எஸ்பி ராஜேஷ்வரி சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.
மண்டபம் அகதிகள் முகாம் ஐஜி ப்ரமோத்குமார் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு பிரிவு ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.

லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி முருகன் பொருளாதாரக் குற்றத்தடுப்புப்பிரிவு ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார். பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு எஸ்.பி ஜெயலட்சுமி புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பிரிவு எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

Advertisement
மேலும் செய்திகள்
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
m-k-stalin-his-first-action
திமுகவிற்கு குடைச்சல் கொடுத்தவர்களுக்கு ஸ்டாலின் “செக்”!
how-kadampur-raju-win-against-ttv-dinakaran
டிடிவி தினகரன் கடம்பூர் ராஜுவிடம் ஏன் தோற்றார்?!
traffic-ramasamy-died-due-to-illness
சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி மரணம்!
/body>