கொள்கைகளை வகுப்பதில் மக்களின் பங்களிப்பு அவசியம் அதிகாரிகளுக்கு மோடி அறிவுறுத்தல்

we should take peoples expectations, modi tells union secretaries.

by எஸ். எம். கணபதி, Jun 11, 2019, 08:46 AM IST

‘கொள்கைகளை வகுப்பதில் மக்களை பங்கேற்கச் செய்ய வேண்டும், அவர்களின் எதிர்பார்ப்புகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்’ என்று மத்திய அரசு செயலாளர்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டிருக்கிறார்.

நாட்டின் பிரதமராக 2வது முறையாக பொறுப்பேற்றுள்ள மோடி, மத்திய அரசின் பல்வேறு துறை செயலாளர்களின் கூட்டத்தை நேற்று நடத்தினார். அப்போது அவர் கூறுகையில், ‘‘வறுமை ஒழிப்பு மற்றும் தண்ணீ்ர் பிரச்னை ஆகிய 2 விஷயங்களில்தான் மத்திய அரசு அதிக அக்கறை காட்ட வேண்டும்.

பொதுவாகவே, கொள்கைகளை வகுப்பதில் மக்களின் பங்களிப்பு அவசியம். முக்கிய கொள்கைகளில் அவர்களை பங்கேற்கச் செய்ய வேண்டும். அவர்களின் எதிர்பார்ப்புகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அவற்றை புரிந்து கொண்டு இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும்’’ என்றார்.

இந்த கூட்டத்தில் மூத்த மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிர்மலா சீத்தாராமன், ஜிதேந்திர சிங் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

You'r reading கொள்கைகளை வகுப்பதில் மக்களின் பங்களிப்பு அவசியம் அதிகாரிகளுக்கு மோடி அறிவுறுத்தல் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை