தண்ணீர் தட்டுப்பாடு என்பது வதந்தி..! அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கம்

Minister velumani explain water crisis

Jun 17, 2019, 12:34 PM IST

தமிழகத்தில் அதிலும் குறிப்பாக சென்னையில் தண்ணீர் பிரச்சனையை அரசு தீர்க்கவில்லை என்பது திட்டமிட்டு பரப்பப்படும் வதந்தி என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

தண்ணீர் தட்டுபாட்டை போக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உள்ளாட்சித்துறை அதுகாரிகள் மேற்கொண்டு வருவதாகவும், தண்ணீர் பிரச்சனையை மானப்பபிரச்சனையாக கருதி அனைத்து அதிகாரிகளும் பணியாற்ற வேண்டும் எனவும் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியிருக்கிறார்.

ஐ.டி.ஊழியர்களை வீட்டிலிருந்தே பணி புரிய சொல்வது ஏற்கனவே ஐ.டி.நிறுவனங்களில் உள்ள நடைமுறை என்றும், அதற்கும் தண்ணீர் தட்டுப்பாடு சம்பந்தகம் இல்லை எனவும் விளக்கியிருக்கிறார். அடுக்குமாடி குடியிருப்புகளில் நீர் சேமிப்பை வலியுறுத்தும் விதமாக, கழிவுநீரை மறுசுழற்சி செய்ய அதிகாரிகள் அறிவுறுத்தி வருவதாகவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்திருக்கிறார்.

இதைவிட பல கடினமான காலங்களில் எல்லாம் கூட உள்ளாட்சித்துறை சிறப்பாக செயல்பட்டு மக்களின் பாராட்டுக்களை பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும்,மக்களுடைய புகாரின் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், எந்த அதிகாரியாக இருந்தாலும், பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் வேலுமணி கூறினார். 

- தமிழ் 

பள்ளிகளில் தண்ணீர் பஞ்சம்; 17ம் தேதி அரசு ஆய்வு

You'r reading தண்ணீர் தட்டுப்பாடு என்பது வதந்தி..! அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கம் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை