மகாராஷ்டிரா, அரியானா தேர்தலில் மதியம் வரை வாக்குப்பதிவு மந்தமாக காணப்பட்டது. மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது.
இங்கு மொத்தம் உள்ள 288 சட்டசபை தொகுதிகளிலும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. பாஜக-சிவசேனா மீண்டும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. அந்த கூட்டணிக்கும் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. பல பகுதிகளில் மழை காரணமாக காலையில் வாக்குச்சாவடிகளில் மிகக் குறைந்த வாக்காளர்கள் காணப்பட்டனர்.
காலை 9 மணி வரை வெறும் 5 சதவீத வாக்குகளே பதிவாகின. மதியம் ஒரு மணியளவில் இம்மாநிலத்தில் 27.97 சதவீத வாக்குகள் பதிவாகின அரியானாவில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அங்கு பாஜக தனித்து போட்டியிடுகிறது. இதை எதிர்த்து, காங்கிரஸ், லோக்தளம், பகுஜன்சமாஜ், ஜேஜேபி உள்ளிட்ட கட்சிகள் தனித்தனியே களம் காண்கின்றன. இந்த மாநிலத்திலும் காலையில் வாக்குப்பதிவு மந்தமாகவே காணப்பட்டது.
காலை 11 மணிக்கு மேல் வாக்குப்பதிவு விறுவிறுப்படைந்தது. மதியம் ஒரு மணியளவில் 35.76 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது.