திமுக மகளிரணி பொதுச்செயலாளர் கனிமொழிக்கு கடந்த 3ம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து டுவிட்டரில், ``எனக்கு கோவிட்- 19 தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். மருத்துவமனையில் எனக்குத் தேவையான மருத்துவ உதவிகள் அளிக்கப்படுகின்றன. எனது உடல் நலன் குறித்து அக்கறையுடன் விசாரித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி!" என்று குறிப்பிட்டு இருந்தார்.
தொடர்ந்து அவர் சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வரும் நேற்று சட்டமன்றத் தேர்தலை ஒட்டி வாக்களிக்க வந்தார். கொரோனா பாதித்தவர்கள் மாலை 6 மணிக்கு மேல் வாக்களிக்கலாம் என்று கூறியதால் 6 மணிக்கு மேல் சென்னை மயிலாப்பூர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்தார்.
ஆம்புலன்ஸ் மூலம் வாக்குச்சாவடிக்கு வருகை தந்த அவர், பிபிஇ கிட் அணிந்துவந்து முறையான பாதுகாப்புடன், தனது ஜனநாயக கடைமையை ஆற்றினார். கனிமொழியை போலவே திமுக அம்பத்தூர் வேட்பாளர் ஜோசப் சாமுவேலும் பிபிஇ உடை அணிந்துவந்து வாக்களித்தார். இதன்பின்னர் மீண்டும் மருத்துவமனைக்கு சென்றவர், உடல்நலம் தேறியதை அடுத்து இன்று வீடு திரும்பினார். அவருக்கு ஆதரவாளர்கள் வரவேற்பு கொடுத்தனர்.