“திமுக பதவி ஏற்றதும் அதிரடி நடவடிக்கைதான்” : உதயநிதி ஆவேசம்…!

by Ari, May 4, 2021, 12:49 PM IST

தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றியுள்ள திமுக, வரும் வெள்ளிக்கிழமை பதவி ஏற்கிறது. முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்கவுள்ளார். அவருடன் அமைச்சர்களும் பதவி ஏற்க உள்ளனர். அமைச்சரவையில், அவருடன் பிற அமைச்சர்களும் பதவி ஏற்பார்கள் எனறு எதிர்பார்க்கப்படும் நிலையில், உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என தகவல்கள் பரவி வருகின்றன.

திமுக இளைஞரணி செயலாளராக உள்ள உதயநிதி ஸ்டாலின், சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் முதன்முதலாக போட்டியிட்டு பெருவாரியான வாக்கு விதிதியாசத்தில் பெற்று அசத்தியுள்ளார். நடந்து முடிந்த தேர்தலில் அவர் மொத்தம் 91,776 வாக்குகள் பெற்றுள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் கசாலியை விட 68,133 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார.

இதைத்தொடர்ந்து, சென்னை புதுப்பேட்டை பகுதியில், கொரோனா நலத்திட்ட உதவிகளை வழங்கிய உதயநிதி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, எனக்கு கிடைத்து இருக்கக்கூடிய வெற்றி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி என்றும் தன்னுடைய தாத்தா கருணாநிதிக்கு கிடைத்த வெற்றி என நெகிழ்ச்சியாக பேசினார். தனக்கு அமைச்சர் பதவி கிடைக்குமா என்பது குறித்து, “இன்னும் 4 நாட்களில் தெரிந்து விடும்” என்று பதிலளித்தார். பொள்ளாச்சி விவகாரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், பதவி ஏற்ற பிறகு அதிரடி நடவடிக்கைகள் இருக்கும் என்று கூறினார்.

You'r reading “திமுக பதவி ஏற்றதும் அதிரடி நடவடிக்கைதான்” : உதயநிதி ஆவேசம்…! Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை