மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொடியை அக்கட்சியின் தலைவர் கமல் ஹாசன் ஏற்றி வைத்தார்.
நடிகர் கமல்ஹாசன், கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி, மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில், கட்சியின் பெயர் மற்றும் கொடியை அறிமுகப்படுத்தினார். மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு கடந்த மாதம் 22 ஆம் தேதி தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியது.
இன்றைய தினம், சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொடியேற்ற விழா நடந்தது. அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்வில் பங்கேற்ற தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
பின்னர் உரையாற்றிய மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன், துணை தலைவராக கு.ஞானசம்பந்தன், பொதுச்செயலாளராக அருணாச்சலத்தையும், பொருளாளராக சுரேஷ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
உயர்மட்டக் குழு கலைக்கப்பட்டு, அக்குழுவில் இடம்பெற்ற உறுப்பினர்கள் பிரியா, கமீலா நாசர், பாரதி கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் செயற்குழு உறுப்பினர்களாக நியமனம். கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மண்டல உறுப்பினர்கள் பட்டியலையும் கமல்ஹாசன் வெளியிட்டார். கட்சியின் நிர்வாக குழு உறுப்பினர்களுக்கு தொண்டர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியால் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பு குறித்து செய்தி வெளியானதை அடுத்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதற்காக நடிகர் கமல் மன்னிப்பு கோரியுள்ளார்.