அரசியல் பள்ளியில் ராகுல் டிகிரி... சிவசேனா கருத்து

அரசியல் பள்ளியில் ராகுல் காந்தி தேர்ச்சி பெற்றுள்ளார் - சிவசேனா கருத்து

Jul 21, 2018, 10:46 AM IST

உண்மையான அரசியல் பள்ளிக்கூடத்தில் இருந்து ராகுல் காந்தி பட்டம் பெற்றுவிட்டதாக சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கருத்து தெரிவித்துள்ளார்.

Rahul Gandhi

மத்தியில் ஆளும் பாஜக அரசு மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்ற மக்களவையில் அனல் பறக்க பேசினார். ரபேல் போர் விமானங்கள் கொள்முதல் பேரம், விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை குறித்து ராகுல் காந்தி கேள்வி கணைகளை தொடுத்தார்.

தம்மை சிறுபிள்ளையாக மோடி கருதுகிறார். ஆனாலும் நான் அவர் மீது வெறுப்பு கொள்ள மாட்டேன் என்று கூறி விட்டு பிரதமர் இருக்கைக்கு சென்று மோடியை ராகுல் காந்தி கட்டி தழுவினார். பதிலுக்கு ராகுலை அழைத்து கைகுலுக்கு பிரதமர் பாராட்டினார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பரபரப்பான பேச்சு, அத்தனை பேரையும் வியப்பில் ஆழ்த்தியதோடு, அவரது செயல்கள் நாடாளுமன்றத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ராகுலின் செயலை அவரது தாயார் சோனியா காந்தி உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் அனைவரும் மேஜையைத் தட்டி வரவேற்று ஆர்ப்பரித்தனர்.

Rahul Gandhi

மத்திய அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் பிரதமரை எதிர்க்கட்சி தலைவர் ஒருவர் கட்டித்த ழுவியது நாடாளுமன்ற மக்களவையில் இதுவே முதல் முறை என சொல்லப்படுகிறது. இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவியது.

இது குறித்து சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் பேசுகையில், ''மக்களவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்போது பிரதமரை ராகுல் காந்தி கட்டிப்பிடிக்கவில்லை. மோடிக்கு ராகுல் காந்தி அளித்த மிகப்பெரிய அதிர்ச்சியாகவே பார்க்கிறோம்."

"உண்மையான அரசியல் பள்ளிக்கூடத்தில் இருந்து ராகுல் காந்தி பட்டம் பெற்றுவிட்டார். பாஜகவுக்கு இன்று கிடைத்த அதிர்ச்சியைப் போல் அடுத்து எதிர்காலத்தில் அடுத்தடுத்த அதிர்ச்சிகளை ராகுல் கொடுப்பார்'' எனத் தெரிவித்தார்.

You'r reading அரசியல் பள்ளியில் ராகுல் டிகிரி... சிவசேனா கருத்து Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை