எதையும் தாங்கும் இதயம் என்பதற்கான அர்த்தத்தை துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் விளக்க வேண்டும் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு கேட்டுக்கொண்டுள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு, டெல்லியில் அக்கட்சியின் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து பேசினார். தமிழகத்தில் நிலவும் பிரச்சினைகள், அரசியல் நிலவரம் உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் குறித்து பேசியதாகக் கூறப்படுகிறது.
சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, "காங்கிரஸ் பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தி ஆக வேண்டும் என்பது தான் கட்சியின் நிலைப்பாடு. தேர்தல் நேரத்தில் இது குறித்து முடிவு எடுக்கப்படும்" எனக் கூறினார்.
"அதிமுக தலைவர்களை பா-ஜக தலைவர்கள் மதிப்பதில்லை. பா.ஜ.கவின் அடிமையாக அ.தி.மு.க அரசு செயல்படுகிறது"என குஷ்பு விமர்சித்தார்.
பன்னீர்செல்வத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்காதது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த குஷ்பு, எதையும் தாங்கும் இதயம் என்பதற்கான அர்த்தத்தை துணைமுதலமைச்சர் பன்னீர்செல்வம் விளக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.