மறைந்த பிறகும் இடஒதுக்கீட்டில் திமுக தலைவர் கருணாநிதி வெற்றி பெற்றதை எண்ணி அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் கண்ணீர் வடித்து அழுதார்.
திமுக தலைவர் கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த உத்தரவு உடனடியாக ராஜாஜி ஹாலில் உள்ள திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கு தெரிவிக்கப்பட்டது.
இறந்த பிறகும் தந்தையும், தலைவருமான கருணநிதி இடஒதுக்கீட்டில் வெற்றி பெற்றதை எண்ணி ஸ்டாலின் கண்ணீர் வடித்து கதறி அழுதார். நிலைகுழைந்து கீழே விழ முயன்ற ஸ்டாலினை ஆ.ராசா உள்ளிட்டோர் தேற்றினர்.
திமுக முதன்மை செயாளர் துரைமுருகன், எம்.பி ஆர்.எஸ்.பாரதி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா ஆகியோர் ஸ்டாலினை கட்டிபிடித்து கண்ணீர் விட்டு கதறி அழுததோடு, அவருக்கு ஆறுதல் கூறினர்.
உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று திமுக தொண்டர்கள் உணர்ச்சி பிழம்போடு, ‘வாழ்க வாழ்க வாழ்கவே தலைவர் கலைஞர் கருணாநிதி புகழ் வாழ்கவே! என விண்ணை முட்டும் அளவுக்கும் கோஷம் எழுப்பினர்.