நாடாளுமன்ற தேர்தல்... தேமுதிக தனித்து போட்டி

2019 நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக தனித்து போட்டி

Aug 24, 2018, 15:58 PM IST

2019 நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக தனித்து போட்டி என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Vijayakanth

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் நாளை 66-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில், இன்று கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடந்தது.

தேமுதிக-வின் சார்பில் பெருவெள்ளதால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு 1.30 கோடி ரூபாய் மதிப்பிலான அத்தியாவசிய நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. எம்.ஜி.ஆர் காது கேளாதோர் பள்ளிக்கு 50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது.

முன்னதாக பேசிய பிரேமலதா, "விஜயகாந்த் வெளிநாடு சென்றிருந்த போது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியும் முன்னாள் பிரதமர் வாஜ்பாயும் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தார்.

25மணி நேரம் தொடர் பயணம் செய்து வந்ததும், நேரடியாக கலைஞர் சமாதிக்கு சென்று மரியாதை செலுத்துவது தான் முதல் வேலை எனக் கூறினார், அதன்படியே விடியற்காலை சென்று அஞ்சலி செலுத்தினோம்."

"மழை நீர் ஒரு பக்கம் காவிரியில் வெள்ளமாய் சென்று கடலில் சேர்கிறது, ஒரு பக்கம் கடைமடைக்கு கூட கூட தண்ணீர் செல்லாத ஒரு அவலநிலை உள்ளது. கேரள வெள்ளத்திற்கு முடிந்த உதவியை செய்ய வேண்டும் என நினைத்தார் அதன் அடிப்படையில் ஒன்றரை கோடிக்கும் அதிகமான நிவாரண பொருட்களை வழங்க உள்ளோம்."

"விஜய்காந்த் நலம்பெற பிரார்த்தனை செய்த தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றி" என கண்ணீர் மல்க பேசினார்.

"அதுமட்டும் இல்லாமல் மீண்டும் மருத்துவ மேல்சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல உள்ளதாகவும், சென்று வந்தவுடன் மீண்டும் சிங்கம் போல அரசியல் பணியில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் ஈடுபடுவார்" எனவும் அவர் பேசினார்.

அதன்பிறகு தேமுதிக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், வரும் 2019 நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதியிலும் போட்டியென அறிவிக்கப்பட்டுள்ளதால், தனித்து போட்டி என்பது உறுதியாகியுள்ளது.

You'r reading நாடாளுமன்ற தேர்தல்... தேமுதிக தனித்து போட்டி Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை