பாலஸ்தீனத்துக்கான நிதியுதவியை நிறுத்தியது அமெரிக்கா

Aug 25, 2018, 09:50 AM IST

பாலஸ்தீனத்துக்கு கொடுப்பதாக, அமெரிக்கா அறிவித்திருந்த 200 மில்லியன் டாலருக்கும் அதிகமான நிதியுதவி நிறுத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Donald Trump

ஜெரூசலத்தை இஸ்ரேல் தலைநகராக அமெரிக்கா அங்கீகரித்ததைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையுடனான உறவை முறித்துக்குண்டது பாலஸ்தீனம்.

இந்நிலையில், இருநாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்த நிலையில் பாலஸ்தீனத்திற்கு வழங்கப்பட்டு வந்த நிதியுதவி நிறுத்தப்படுவதாக அமெரிக்கா அதிகாரப்பூர்வாக அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு அமெரிக்க பட்ஜெட்டில், பாலஸ்தீனத்தின் வெஸ்ட் பேங் மற்றும் காசா நகரங்களின் நிர்வாகம், சுகாதாரம், கல்வி போன்றவற்றை மேம்படுத்த 251 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்து.

ஆனால், அப்பகுதிகளில் ஹமாஸ் பயங்கரவாதிகளின் தாக்கம் அதிகம் இருப்பதால் பாலஸ்தீனத்துக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட 200 மில்லியன் டாலருக்கும் அதிகமான தொகை நிறுத்தப்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அத்துடன், பாலத்தீனத்திற்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட நிதி வேறு திட்டங்களுக்காக பயன்படுத்தப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த முடிவை அரசியல் ‘ரீதியிலான மலிவான அச்சுருத்தல்’ என குறிப்பிட்டுள்ள பாலஸ்தீனம், இது போன்ற நடவடிக்கைகளால் பாலஸ்தீன மக்களையும், அரசையும் மிரட்டமுடியாது. தங்கள் நாட்டு மக்களின் உரிமை விற்பனைக்கானது அல்ல என அமெரிக்காவுக்கு பாலஸ்தீனம் பதிலடி கொடுத்துள்ளது.


Leave a reply