மதுரை முனி சாலையில் அண்ணா பிறந்த நாள் தொடர்பாக அதிமுக பொதுக் கூட்டத்தை நடத்தியது. இதில் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியது, "எம்ஜிஆர் கட்சிக்கு அண்ணாவின் பெயரை வைத்திருக்காவிட்டால் அவரை யாருக்கும் தெரிந்ந்திருக்காது" என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
அவர் பேசுகையில், "அண்ணாவின் பெயரை கட்சிக்கு வைத்தவர் எம்ஜிஆர். அதுபோல் அவரது உருவத்தை கட்சியின் கொடியாக வைத்தார். எம்ஜிஆரின் யுத்தி, அந்த சாதுர்யமான முடிவுதான் அண்ணாவை பற்றி இந்த இயக்கம் 46 ஆண்டுகளாக புகழை பாடி கொண்டிருக்கிறோம்.
எம்ஜிஆர் மட்டும் இந்த இயக்கத்தை தொடங்காமல் இருந்திருந்தால் அண்ணா ஒருவர் இருந்தார், அவர் வாழ்ந்தார் என்பது இளைஞர் தலைமுறையினருக்கு தெரியாமலேயே போய் இருக்கும்" என்றார்.
அனைவராலும் மிகவும் பிரபலமாக அண்ணா அல்லது அறிஞர் அண்ணா என அழைக்கப்பட்ட காஞ்சிபுரம் நடராஜன் (கா.ந.) அண்ணாதுரை, இந்தியா குடியரசான பிறகு ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது திராவிடக்கட்சித் தலைவர் என்ற பெருமையுடன், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவர் என்ற பெருமையும் கொண்டவர்.
அண்ணா அரசியல் வாழ்க்கையை தவிர, நாடகங்களுக்கும், திரைபடங்களுக்கும் திரைக்கதைகள் எழுதும் திறமை படைத்தவராக விளங்கினார். அது மட்டுமல்லாமல் அண்ணாதுரை ஒரு மிகச் சிறந்த தமிழ் சொற்பொழிவாளரும், மேடைப் பேச்சாளரும் ஆவார்.
தமிழகத்தில் அண்ணாவை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது அது வெறும் பெயரினால் மட்டும் அல்ல அரசியலிலும் இலக்கியத்திலும் அவரின் பங்களிப்பால். இதேபோல் மற்றொரு அண்ணா பிறந்தநாள் விழாவில் கருணாநிதிக்கு அரசு மரியாதை கொடுத்தது அதிமுக அரசின் பிச்சை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளது சர்ச்சையை ஏற்ப்படுத்தியடு குறிப்பிடதக்கது.