கூவத்தூர் சொகுசு விடுதியில் நடந்தது குறித்து நீதிமன்றத்தில் தெரிவிப்பேன் திருவாடானை தொகுதி கருணாஸ் மிரட்டல் விடுத்துள்ளார்.
சென்னை சாலிகிராமத்தில் செய்தியாளர்களை சந்தித்த கருணாஸ், " இதுவரை எந்த வழக்கும் என்மேல் இல்லை. எந்த மேடையில் இதுவரை சர்ச்சையாக பேசவில்லை. தி.நகர் துணை ஆணையர் அரவிந்தன் காவல்துறை அதிகாரி செய்யும் தவறை அனைவரும் ஆதரிக்கின்றனர். உள்துறை செயலாளருக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கை இல்லை." எனக் குற்றம்சாட்டினார்.
"கூவத்தூர் சொகுசு விடுதியில் நடந்தது குறித்து தேவைப்பட்டால் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் தெரிவிப்பேன். என் சமூக மக்கள், காவல்துறை பொய் வழக்கு போடுகிறது."
"குறிப்பிட ஒரு சமூகத்தை ஒருமையில் நான் பேசியதற்கு நான் வருந்துகிறேன். என் தொகுதிக்கு செல்ல கூட காவல்துறை பாதுகாப்பு இல்லை. இன்னும் சொல்லபோனால் பலர் காவல்துறையை விமர்சிக்கின்றனர்."
"காவல்துறை எனக்கு கொடுக்கப்பட்ட பாதுகாப்பை திரும்ப எடுத்து கொண்டது. உளவுத்துறை அதிகாரி முதல்வருக்கு தவறான தகவலை கொடுக்கிறார். அமைச்சர் ஜெயக்குமார் அரிச்சந்திரன் போல் பேசுவார். தம்மீது காவல்துறை போடப்பட்ட வழக்குகளை சந்திப்பேன்." என கருணாஸ் கூறியுள்ளார்.