இந்திய சமூக அரசியலை வாக்கு வங்கி கரையான் அரித்துவிட்டதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
மேற்குவங்க மாநிலத்தின் தலைநகர் போபாலில் பாஜக சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, அம்மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, "வாக்கு வங்கி அரசியல் நம்முடைய சமூகத்தை கரையான்கள் போல அழித்து விட்டது. வாக்கு வங்கி அரசியலை இந்தியாவைவிட்டு அகற்றுவதுதான் எங்களுடைய பணியாகும். மத்திய பிரதேச மாநிலம் வளர்ச்சி தொடர்பாக காங்கிரசிடம் எந்த எண்ணமும் கிடையாது." என்றார்
" மிகப்பெரிய தோல்விகளை சந்தித்தாலும் அதற்கான காரணங்களை ஆராய காங்கிரஸ் நினைக்கவில்லை. இப்போது கூட்டணி அமைக்க காங்கிரஸ் சிறிய கட்சிகளிடம் கெஞ்சுகிறது. காங்கிரஸ் உள்நாட்டில் கூட்டணி அமைப்பதில் தோல்வியை தழுவிவிட்டது. காங்கிரஸ் கட்சி எவ்வளவுதான் களங்கம் ஏற்படுத்தினாலும் தாமரை மலர்ந்துக் கொண்டேதான் இருக்கும்." என பிரதமர் மோடி உரையாற்றினார்.