கியாஸ் சிலிண்டர் விலையை குறைக்க நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

Advertisement

கியாஸ் சிலிண்டர் விலையை குறைக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் போன்றவற்றின் விலை திடீர் திடீரென்று உயர்த்தப்பட்டு மக்கள் மீது பொருளாதார சுமை ஏறுவதை மத்திய அரசு ஒரு பொருட்டாகவே கருதவில்லை.

நேற்றைய தினம் இந்திய ஆயில் நிறுவனம் சமையல் கியாஸ் சிலிண்டரின் விலையை உயர்த்தியுள்ளது. அதாவது மானியமில்லாத கியாஸ் சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.59 உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல மானிய விலை கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.2.89 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.

மானியம், மானியம் இல்லா சிலிண்டர் என எதுவாக இருந்தாலும் நாட்டில் நிலவும் பொருளாதார நிலைமை, மக்கள் படும் கஷ்டம், சிறு குறு தொழிலில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி ஆகியவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

எனவே, மத்திய அரசு வாக்களித்த மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும், அனைத்து தரப்பு மக்களுக்கும் சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலாவது உடனடியாக எரிபொருட்களின் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று த.மா.கா. சார்பில் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement
மேலும் செய்திகள்
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
m-k-stalin-his-first-action
திமுகவிற்கு குடைச்சல் கொடுத்தவர்களுக்கு ஸ்டாலின் “செக்”!
how-kadampur-raju-win-against-ttv-dinakaran
டிடிவி தினகரன் கடம்பூர் ராஜுவிடம் ஏன் தோற்றார்?!
traffic-ramasamy-died-due-to-illness
சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி மரணம்!
/body>