மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டிருப்பதற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் துணை பொதுச்செயலாளர் தினகரன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
திருச்சியில் பேசிய தினகரன், "எந்தவித ஆதாரமில்லாமல் தனிநபர்கள் மீது அவதூறாக செய்திகளை வெளியிடுவது தவறு. அந்த வகையில் நக்கீரன் கோபால் மீது வழக்கு தொடர்ந்து இருப்பதை வரவேற்கிறேன்." என்றார்
"பத்திரிகையாளர்கள் தங்களது பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும். கடந்த, 1996ம் ஆண்டு என் மீது அவதூறு செய்தி வெளியிட்ட நக்கீரன் கோபாலுக்கு ஆறு மாதம் சிறைத் தண்டனை பெற்று கொடுத்தேன்." என தினகரன் குறிப்பிட்டார்.
"துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மட்டுமல்ல, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் நடை பயிற்சியின்போது என்னை சந்தித்தது உண்மை தான். அப்போது ஆட்சியில் உள்ள பலகுறைகளை என்னிடம் தெரிவித்தனர்."
"பாஜகவுடன் கூட்டணி என்பது தற்கொலைக்கு சமம். அதை நாங்கள் செய்ய மாட்டோம். 13 பேர் இருக்கும் வரை அதிமுகவில் இணைவது என்ற பேச்சுக்கே இடமில்லை" என தினகரன் திட்டவட்டாக கூறியுள்ளார்.