சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை, எம்.எல்.ஏ கருணாஸ் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், "என் மீது பொய்யான வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த விசயத்தில் நடுநிலையாக காவல் துறை செயல்படவில்லை என ஸ்டாலின் கண்டன குரல் எழுப்பினார். அதற்கு நன்றி தெரிவித்தேன்." என்றார்
"தம்மை தகுதி நீக்கம் செய்வதற்கான நோட்டீஸை அனுப்பும் தமிழக அரசின் முயற்சியை பழிவாங்கும் நடவடிக்கையாக தான் மக்கள் பார்க்கிறார்கள்.சபாநாயகர் ஒரு தலைபட்சமாக செயல்படுகிறார். அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என நோட்டீஸ் கொடுத்திருக்கிறேன்."
"திமுக தலைவர் ஸ்டாலினும், டிடிவி தினகரனும் என்னை இயக்கவில்லை. எனது மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் நான் தவறு செய்யவில்லை என்ற அடிப்படையில், எனது தனி உரிமை கோரிக்கையையும் சபாநாயகருக்கு அனுப்பி வைத்திருக்கிறேன்." என எம்.எல்.ஏ கருணாஸ் விளக்கம் அளித்தார்.