விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 20 தொகுதிகளுக்கும் அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நியமனம் செய்தனர்.
அவர்களின் விவரம் கீழே வருமாறு:
பெரம்பூர் தொகுதி: மதுசூதனன், ஜெயக்குமார், உடுமலை ராதாகிருஷ்ணன், ஜே.சி.டி. பிரபாகர், விஜிலா சத்தியானந்த், பாலகங்கா, சத்யா, வி.என்.ரவி உள்ளிட்டோர் நியமனம்.
திருவாரூர் தொகுதி: அமைச்சர் காமராஜ், கோபால், ஜெயபால் உள்ளிட்டோர் நியமனம்.
தஞ்சை தொகுதி: வைத்திலிங்கம், துரைக்கண்ணு, எஸ்.வளர்மதி, தாமரை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நியமனம்.
ஆம்பூர் தொகுதி: கே.பி.முனுசாமி, கே.சி.வீரமணி, நிலோபர் கபில், செஞ்சி ந.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் நியமனம்.
அரவக்குறிச்சி தொகுதி: தம்பிதுரை, எம்.ஆர்.விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் நியமனம்.
குடியாத்தம் தொகுதி: அமைச்சர் தங்கமணி உள்ளிட்ட 6 பேர் நியமனம்.
விளாத்திகுளம் தொகுதி: அமைச்சர் வேலுமணி உள்ளிட்ட 6 பேர் நியமனம்.
திருப்போரூர் தொகுதி: அமைச்சர் சி.வி.சண்முகம் உள்பட 9 பேர் நியமனம்.
சாத்தூர் தொகுதி: தளவாய் சுந்தரம் உள்பட 5 பேர் நியமனம்.
சோளிங்கர் தொகுதி: அமைச்சர் சம்பத் உள்பட 5 பேர் நியமனம்.
மானாமதுரை தொகுதி: செங்கோட்டையன், பாஸ்கரன், கோகுல இந்திரா, ராஜகண்ணப்பன் உள்ளிட்டோர் நியமனம்.
அரூர் தொகுதி: பொன்னையன், கே.சி.அன்பழகன், வி.சரோஜா, கருப்பணன் உள்ளிட்டோர் நியமனம்.
ஆண்டிபட்டி தொகுதி: ஓபிஎஸ், திண்டுக்கல் சீனிவாசன், ஜக்கையன், விஜயபாஸ்கர், எஸ்.பி.எம். சையதுகான், ஆர்.பார்த்திபன் உள்ளிட்டோர் நியமனம்.
திருப்பரங்குன்றம் தொகுதி: ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு, ராஜன் செல்லப்பா, பெரியபுள்ளான், மாணிக்கம், பா.நீதிபதி உள்ளிட்டோர் நியமனம்.
நிலக்கோட்டை தொகுதி: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உள்பட 5 பேர் நியமனம்.
பாப்பிரெட்டிபட்டி தொகுதி: அமைச்சர் அன்பழகன் உள்பட 4 பேர் நியமனம்.
பரமக்குடி தொகுதி: ஓ.எஸ்.மணியன் உள்பட 5 பேர் நியமனம்.
ஒட்டப்பிடாரம்: அமைச்சர் கடம்பூர் ராஜு உள்பட 5 பேர் நியமனம்.
பூவிருந்தவல்லி தொகுதி: அமைச்சர் பெஞ்சமின் உள்பட 10 பேர் நியமனம்.
பெரியகுளம் தொகுதி: ஓபிஎஸ், முருகுமாறன், சுப்புரத்தினம் உள்ளிட்டோர் நியமனம்.