சந்திரபாபு நாயுடு முன்னெடுக்கும் கூட்டணி முயற்சிக்கு முழு ஆதரவு: ஸ்டாலின்

Advertisement

தேசிய அளவில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக பிரமாண்ட கூட்டணியை உருவாக்குவது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலினுடன் ஆந்திரா முதல்வரும் தெலுங்குதேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தினார். இச்சந்திப்பின் போது திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி, திமுக பொருளாளர் துரைமுருகன், கொள்கை பரப்புச் செயலாளர் ஆ. ராசா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

 

 

இச்சந்திப்பின் போது திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி, திமுக பொருளாளர் துரைமுருகன், கொள்கை பரப்புச் செயலாளர் ஆ. ராசா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இந்த ஆலோசனையைத் தொடர்ந்து சந்திரபாபு நாயுடுவும் மு.க.ஸ்டாலினும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பாரதிய ஜனதா ஆட்சியை வீழ்த்த ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டு வருகிறார். ஏற்கனவே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை இது தொடர்பாக சந்தித்து இருக்கிறார்.

அச்சந்திப்பின் போது அதை திமுக சார்பாக நான் வரவேற்று இருக்கிறேன். ஏற்கனவே மோடி ஆட்சியில் மாநில உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன.

அதை தடுத்து நிறுத்த அனைத்து மாநில் கட்சிகள் ஒன்றிணைந்து பாஜக ஆட்சியை வீழ்த்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்துகிறேன். நீதிமன்றம், சிபிஐ, ஆர்பிஐ ஆகியவை சுதந்திரமாக தன்னிச்சையாக செயல்படக் கூடியவை.

அந்த அமைப்புகளை அச்சுறுத்துகிற மிரட்டுகிற அரசாக மோடி அரசு செயல்படுகிறது. இதைத் தடுக்க வேண்டும் எனில் இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களின் கட்சிகளின் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்கிற நல்லெண்ணத்துடன் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டு வருகிறார்.

இதனடிப்படையில் திமுகவின் ஆதரவை அவர் கேட்டுக் கொண்டார். நாங்களும் மனப்பூர்வமாக ஆதரவைத் தெரிவித்திருக்கிறோம். இதனைத் தொடர்ந்து டெல்லியிலோ வேறு மாநிலங்களிலோ ஒன்று கூடி விவாதிக்கலாம் என கூறினார். அக்கூட்டங்களில் நான் பங்கேற்பதற்காக உறுதி அளித்திருக்கிறேன் என்றார்.

ஸ்டாலினைத் தொடர்ந்து சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நாடும் ஜனநாயகமும் ஆபத்தான நிலையில் உள்ளன. நாட்டையும் ஜனநாயகத்தையும் காக்க வேண்டிய நிலையில் தற்போது உள்ளோம்.

இவை காப்பாற்றப்பட வேண்டும். நாட்டின் தன்னாட்சி அமைப்புகள் ஆபத்தான நிலையில் உள்ளன. நாட்டின் பொருளாதாரம் என்ன நிலையில் இருக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

மதவாத பாஜக ஆட்சியை வீழ்த்த அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வலியுறுத்தினேன். தமிழகத்தில் தலைசிறந்த, பலம்வாய்ந்த தலைவர் மு.க.ஸ்டாலின்.

நாட்டைக் காப்பாற்ற கரம் கோர்க்குமாறு மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்தேன். நாட்டைக் காக்க அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

பாஜகவுக்கு எதிராக ஓரணியில் திரள வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும் ஓரணியில் வர வேண்டும் என்றார்.

முந்தைய நிகழ்வுகள்: (விமான நிலையத்தில் இருந்து ஸ்டாலின் வீடு வரை)

- சென்னை விமான நிலையத்தில் சந்திரபாபு நாயுடுவை வரவேற்க தெலுங்குதேசம் கட்சியினர் குவிந்தனர்.

- சந்திரபாபு நாயுடு வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு

- விமான நிலையத்தில் இருந்து சந்திரபாபு நாயுடுவின் வாகனம் புறப்பட்டது.

-  ஆழ்வார்பேட்டை  இல்லம் நோக்கி சந்திரபாபு நாயுடுவின் வாகனம் சென்று கொண்டிருக்கிறது.

- ஸ்டாலின் ஆழ்வார்பேட்டை இல்லம் முன்பு தெலுங்குதேசம் கட்சி தொண்டர்கள் திரண்டனர்.

- ஆழ்வார்பேட்டையை நெருங்கிக் கொண்டிருக்கிறது சந்திரபாபு நாயுடுவின் வாகனம்.

 

- ஸ்டாலின் இல்லத்துக்கு வருகை தந்தார் சந்திரபாபு நாயுடு.

- சந்திரபாபு நாயுடுவுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் ஸ்டாலின்

- ஸ்டாலின் இல்லத்தில் கனிமொழி, ஆ.ராசா. துரைமுருகன் உடன் உள்ளனர்

- ஸ்டாலினுடன் மெகா கூட்டணி குறித்து சந்திரபாபு நாயுடு ஆலோசனை.

- இரவு 8.20 மணிக்கு ஆலோசனை நிறைவடைந்தது.

Advertisement
மேலும் செய்திகள்
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
m-k-stalin-his-first-action
திமுகவிற்கு குடைச்சல் கொடுத்தவர்களுக்கு ஸ்டாலின் “செக்”!
how-kadampur-raju-win-against-ttv-dinakaran
டிடிவி தினகரன் கடம்பூர் ராஜுவிடம் ஏன் தோற்றார்?!
traffic-ramasamy-died-due-to-illness
சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி மரணம்!
/body>