ஐதராபாத் மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் எல்-டி மெட்ரோ ஆகியவற்றுடன் செய்து கொண்ட கூட்டாண்மை ஒப்பந்த அடிப்படையில் ஐதராபாத்தில் "பொது போக்குவரத்து " அம்சம் குறித்த அறிவிக்கையை ஊபர் இன்று வெளியிட்டது . இந்த வசதி அறிமுகம் ஆகும் நாட்டின் இரண்டாவது நகரம் ஐதராபாத் ஆகும்.
ஊபர் செயலி மூலம் பயணிகள் தங்கள் இருவழிப் பயணங்களையும் நிகழ் நேரத் தகவல்களுடன் திட்டமிட்டுக் கொண்டு பயணிக்கலாம்.இது குறித்து ஊபர் இந்தியா மற்றும் தெற்காசியத் தலைவர் பிரப்ஜீத் சிங் கூறுகையில் "டிஎம்ஆர்சி நிறுவனத்துடனான எங்கள் வெற்றிகரமான கூட்டாண்மை ஒப்பந்தத்தைத் தொடர்ந்து ஐதராபாத்தில் ஸ்மார்ட் போக்குவரத்துக்கு ஆற்றலை வழங்க எங்கள் பொது போக்குவரத்து திட்டத்தை இணைந்து வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம் " என்றார்.
திறமையான பயண போக்குவரத்தை வழங்குதல் ,பயணிகளின் நேரத்தையும் பணத்தையும் மிச்சப் படுத்துதல் , நகரத்தின் உற்பத்தித் திறனை மேம்படுத்துதல் , ஸ்மார்ட் நகரங்களை உருவாக்குதல் போன்ற எதிர்கால திட்டத்திற்கு இந்த பொது போக்குவரத்து உறுதுணையாக இருக்கும்.