காஞ்சி சங்கர மடத்தின் 70வது பீடாதிபதியாக விஜயேந்திரர் நியமனம்

Mar 3, 2018, 08:23 AM IST

சென்னை: காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதியாக இருந்த ஜெயந்திரர் மறைந்ததை அடுத்து விஜயேந்திரர் 70வது பீடாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் தலைமை பீடாதிபதியாக ஜெயேந்திரர் இருந்தார். இவர், உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 28ம் தேதி காலமானார். சுமார் 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த காஞ்சி கங்கர மடத்தின் விதிகளின்படி பீடாதிபதி இறந்தவுடன் அடுத்த பீடாதிபதியை 48 மணி நேரத்திற்கு அறிவிக்க வேண்டும். இந்நிலையில், இளைய பீடாதிபதியாக பொறுப்பேற்று வந்த விஜயேந்திரர் 70வது பீடாதிபதியாக பொறுப்பேற்க உள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் தண்டலம் கிராமத்தில் பிறந்த விஜேயேந்திரரின் இயர் பெயர் சங்ர நாராயணன். 14 வயதிலேயே சங்கர மடத்தில் இணைந்த விஜயேந்திரர் மீது காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் 25வது குற்றவாளியாக கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலையானவர்.

மேலும், புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைத்தபோது எழுந்து நின்று மரியாதை செலுத்தாமல் அமர்ந்து இருந்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழ் தாய் வாழ்த்துக்கு அவமதித்ததாக அரசியல் தலைவர்கள், ஆன்மீக பெரியவர்கள் என கண்டனம் தெரிவித்தனர்.

You'r reading காஞ்சி சங்கர மடத்தின் 70வது பீடாதிபதியாக விஜயேந்திரர் நியமனம் Originally posted on The Subeditor Tamil

More Spirituality News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை