செம்மரம் வெட்ட வந்ததாக கைது செய்யப்பட்ட 84 தமிழர்கள் விடுதலை

Mar 3, 2018, 09:14 AM IST

ஐதராபாத்: ஆந்திராவில் செம்மரம் வெட்ட வந்ததாக கூறி கைது செய்யப்பட்ட 84 தமிழர்களை பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே ஆஞ்சநேயபுரம் என்ற பகுதி உள்ளது. இங்கு, செம்மரங்களை வெட்ட வந்ததாக கூறி சந்தேகத்தின் பேரில் 84 தமிழர்களை அம்மாநில போலீசார் கைது செய்தனர். இதற்கு தமிழக அரசியல் கட்சிகள், தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.

இந்நிலையில், கைதான 84 பேர்களிடம் இனி ஆந்திர மாநில வனப்பகுதிக்குள் வரமாட்டோம் என்றும், விசாரணைக்கு எப்போது அழைத்தாலும் வரவேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை ஆந்திர போலீசார் விடுத்தனர்.

இதையடுத்து, நிபந்தனைகளை ஏற்றுக் கொண்ட தமிழர்கள் அதற்கான பிரமான பத்திரத்தில் கையெழுத்திட்டனர். இதனால், 84 தமிழர்களையும் விடுவித்து ரேணி குண்டா வட்டாட்சியர் நரசிம்மலு நாயுடு உத்தரவிட்டார். இதையடுத்து அனைவரும் விடுவிக்கப்பட்டனர். கைது செய்து பின்னர் விடுவிக்கப்பட்ட 84 பேரும் வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள்.

You'r reading செம்மரம் வெட்ட வந்ததாக கைது செய்யப்பட்ட 84 தமிழர்கள் விடுதலை Originally posted on The Subeditor Tamil

More Crime News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை