நவராத்திரியின் முதல் நாள் எந்த தெய்வத்தை எப்படி வணங்குவது?

How to celebrate navratri first day

by Vijayarevathy N, Oct 9, 2018, 19:46 PM IST

இன்று நவராத்திரி பண்டிகையின் முதல் நாள் ஆகும். இந்த முதல் நாளில் நவசக்திகளில் ஒருவரான தாய் மகேஸ்வரி தேவியை பூஜித்து வணங்கி அவள் அருளைப் பெறக் கூடிய நாள். புரட்டாசி பிறந்தால் புது வாழ்வு கிடைக்கும் என்பது ஐதீகம்.

க‌ன்‌னி ரா‌சி‌யி‌ல் சூ‌ரிய‌ன் ச‌ஞ்ச‌ரி‌க்கு‌‌ம்போது நம் இ‌ல்ல‌த்‌தி‌ல் அன்னை அ‌ம்‌பிகை வ‌ழிபா‌ட்டை நட‌த்‌தினா‌ல் இ‌ல்ல‌த்‌தி‌ல் ந‌ல்லது நட‌க்கு‌ம் எ‌ன்பது மூதாதைய‌ர்களின் ந‌ம்‌பி‌க்கை ஆகும். அத‌ன்படி நவரா‌த்‌தி‌ரி நா‌ட்க‌ளி‌ல் ஒ‌வ்வொரு நாளு‌ம் ஒ‌வ்வொரு அ‌ம்‌பிகை‌க்கு உக‌ந்த நாளாக கருத‌ப்படு‌கிறது. இ‌ன்று தாய் மகே‌‌ஸ்வ‌ரி‌க்கு உக‌ந்த நா‌ளாக கருதப்பட்டு நவராத்திரியின் முதல் நாள் கொண்டாடப்படுகிறது.

சரி கொலு அமைக்க, கலச ஸ்தாபனம் செய்ய உகந்த நேரம் எது?

இன்று காலை 6.15 - 7.15 மணி மற்றும் 9.15 - 10.15 மணி.மாலையில் 4.45 - 5.45 மணி மற்றும் 7.30 - 8.30 மணி ஆகும்.

கொலு வைக்கப்படும் பூஜையறையில் மாக்கோலம் போட்டு,  சந்தனம் தெளித்து மஞ்சளால் பிள்ளையார் பிடித்து வைக்க வேண்டும். பிறகு கொலு படியில் கலசம் வைத்து வழிப்பட வேண்டும்.

அம்மன் வடிவம் : மகேஸ்வரி (மது கைடவர் என்ற அசுரனை அழித்தவள்)

பூஜை செய்ய: 2 வயது சிறுமியை குமாரி அவதாரத்தில் வணங்க வேண்டும்.

திதி: பிரதமை

கோலம் : அரிசி மாவால் புள்ளி கோலம் போட வேண்டும்.

பூக்கள் : மல்லிகை, சிவப்புநிற அரளி, வில்வ பூக்களால் அர்ச்சனை செய்யவது நல்லது.

நெய்வேத்தியம் : வெண்பொங்கல், சுண்டல், பழம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், மொச்சை, சுண்டை, பருப்பு வடை.

ராகம் : தோடி ராகத்தில் பாடுதல் மிகச்சிறப்பு

பலன் : வறுமை நீங்கும், வாழ்நாள் பெருகும் மகிழ்ச்சியுடன் நீண்ட ஆயுள் வாழ்வார்கள்.

You'r reading நவராத்திரியின் முதல் நாள் எந்த தெய்வத்தை எப்படி வணங்குவது? Originally posted on The Subeditor Tamil

More Spirituality News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை