தமிழகத்தில் போட்டியிடுகிறாரா ராகுல்? சூடுபிடிக்கும் தேர்தல்களம்

தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகளுக்கு விருப்ப மனுக்கள் இன்று பெறப்பட்டது. இதில் முதல் மனுவாக கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும் என விருப்ப மனு கொடுக்கப்பட்டது.

தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகளுக்குப் போட்டியிட விரும்புவோர் காங்கிரஸ் தலைமையகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்றும், நாளையும் விருப்ப மனு வழங்கலாம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்திருந்தார்.அதன்படி இன்று காலை சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனு வழங்கப்பட்ட போது முதல் மனுவாக ராகுல் காந்தி கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட வேண்டும் என விருப்பம் தெரிவித்து மனு வாங்கப்பட்டது.

இந்த முறையும் தனது சொந்த மாநிலமான உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். இருந்தாலும் தமிழகத்தில் உள்ள ஏதேனும் ஒரு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வேண்டுகோள் விடுத்த நிலையில், இன்று ராகுல் பெயரில் விருப்ப மனுவும் பெறப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்திலும் ராகுல் காந்தி போட்டியிடுவாரா? என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

மேலும் செய்திகள்