மக்களவைத் தேர்தலில் 38 தொகுதிகளில் அமமுக போட்டி என அறிவித்திருந்த தினகரன், கூட்டணியில் இணைந்துள்ள எஸ்டிபிஐ கட்சிக்கு தொகுதி ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தலுக்காக திமுகவும், அதிமுகவும் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் மும்முரமாக இருந்தன. ஆனால் தினகரனோ பெரும் அமைதி காத்தார்.இந்த இரு கூட்டணியில் இடம் கிடைக்காத கட்சிகள் அமமுக பக்கம் வரும் என்ற பெரும் எதிர்பார்ப்பில் இருந்தார்.
ஆனால் எந்தக் கட்சியும் வராத நிலையில் தம்மை நாடி வந்த எஸ்டிபிஐ கட்சிக்கு மத்திய சென்னை தொகுதியை ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். எஞ்சிய 38 மக்களவைத் தொகுதிகளிலும், 18 சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் அம முக சார்பில் பலம் வாய்ந்த வேட்பாளர்களை நிறுத்தி தமது செல்வாக்கை நிரூபிக்க தயாராகி விட்டார்.ஓரிரு நாட்களில் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்றும் அமமுக தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன.