கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் காலமானார்.இன்று காலை வீட்டில் நாளிதழ் படித்துக் கொண்டிருக்கும் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிந்தார்.
64 வயதான கனகராஜ் கோவை மாவட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகளில் ஒருவர். வெளிப்படையாகப் பேசக்கூடியவர். கட்சியினர், பொது மக்கள் என யாரும் இவரை எளிதில் அணுகலாம் என்ற அளவுக்கு தொகுதி மக்களின் அன்பைப் பெற்றவர். பொது நிகழ்ச்சிகளில் ஆடல், பாடல் என கூச்சமின்றி அசத்தக் கூடியவர் கனகராஜ்.
இன்று காலை 7 மணீயளவில் கோவை சுல்தான்பேட்டையில் உள்ள இல்லத்தில் நாளிதழ்களை படித்துக் கொண்டிருந்த கனகராஜ் திடீரென மயங்டைய உயிர் ஏற்கனவே பிரிந்து விட்டது என டாக்டர்கள் தெரிவித்தனர்.
கனகராஜுக்கு மனைவியும், ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். மக்களிடம் எளிமையாக பழகக் கூடிய கனகராஜ் மறைவு அதிமுகவினரையும், தொகுதி மக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதிமுக எம்எல்ஏ கனகராஜ் மரணம் குறித்து சூலூர் தொகுதி அதிர்ச்சியில் உள்ளது
கனகராஜ் மறைவையடுத்து தமிழக சட்டப்பேரவையில் காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. இதில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்படும் போது சூலூர் தொகுதிக்கும் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிகிறது.