`நான் சொல்லப்போற விஷயத்தை நாட்டு மக்கள்கிட்ட சேர்த்துருங்க - அரசியல்வாதி அமீர் ரெக்வஸ்ட்!

director ameers Achamillai Achamillai Teaser released

by Sasitharan, Apr 12, 2019, 00:00 AM IST

இயக்குநர் அமீர் தயாரித்து நடிக்கும் ‘அச்சமில்லை அச்சமில்லை' படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குநர் முத்து கோபால் இயக்கத்தில், அமீர் நடிப்பில் உருவாகி வரும் படம் அச்சமில்லை அச்சமில்லை. இந்த படத்ததை அமீர் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘டீம் வொர்க் புரொடக்ஷன் ஹவுஸ்’ மூலம் தயாரித்து வருகிறார். இசை அருண் குமார் அமைக்கிறார். நடிகை சாந்தினி உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர். கோவை, திருப்பூர் பகுதியில் பாயும் நொய்யல் ஆறு மற்றும் அதனை சுற்றியுள்ள விவசாயிகளின் பிரச்னைகளை மையப்படுத்தி படம் உருவாகியுள்ளது. படத்தில் அரசியல்வாதியாக அமீர் நடித்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. சமூக ஆர்வலர்கள் புடைசூழ இந்த விழா நடந்தது. இதில் பேசிய அமீர், அரசியல் கருத்துக்களை பேசி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

இந்தநிலையில் இந்தப்படத்தின் டீஸர் இன்று வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் இந்த டீஸரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். `நடிகர் சங்க பிரச்னையை நாட்டு பிரச்னையாக மாத்திய தமிழக புண்ணியவாங்களே' என வசனங்கள், காட்சி அமைப்புகள், பின்னணி இசை என டீஸர் வரவேற்பை பெற்று வருகிறது. ஏற்கனவே இந்தப் படத்தின் முதல் டீஸர் வெளியாகியிருந்த நிலையில் இன்று இரண்டாவது டீஸர் வெளியாகியுள்ளது.

You'r reading `நான் சொல்லப்போற விஷயத்தை நாட்டு மக்கள்கிட்ட சேர்த்துருங்க - அரசியல்வாதி அமீர் ரெக்வஸ்ட்! Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை