நாட்டின் நலனுக்காக திமுக ஆதரவை கேட்க நேர்ந்தால், தவறாமால் கேட்போம் என பிரதமர் மோடி பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
தேர்தலுக்கு பின் திமுகவுடன் பாஜக கூட்டணி வைத்துக் கொள்ளுமா என்ற கேள்விக்கு பிரதமர் மோடி பதில் அளித்தார்.
நடந்து முடிந்த முதல் கட்ட தேர்தல் தங்கள் கட்சிக்கு புது உத்வேகத்தை கொடுத்துள்ளது. அருணாச்சல பிரதேசத்தில் மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளோம் என்ற தகவல் உறுதியாகியுள்ளது. 20 மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல் பாஜகவுக்கு சாதகமாகவே வந்துள்ளது. அதுபோலவே, எங்களுடைய கூட்டணி கட்சிகளும் வெற்றி பெறும் என நம்புகிறோம். காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகளுடன், தேர்தலுக்கு பின் கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் ஏற்படாது.
ஆனால், தேசத்தின் நலனுக்காக திமுக உள்ளிட்ட எந்த கட்சியாக இருந்தாலும், அதன் ஆதரவு வேண்டும் என்றால், பாஜக அரசு கேட்க தயங்காது என ’தினத்தந்தி’ பத்திரிகைக்கு பிரதமர் மோடி அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
மேலும், பிரதமர் மோடியிடம், நீட் தேர்வு மற்றும் நதிநீர் இணைப்பு குறித்த கேள்விக்கு,
நீட் தேர்வு குறித்து விடை அளிக்காமல் எஸ்கேப் ஆன மோடி, தமிழகத்தின் முக்கிய பிரச்னை தண்ணீர் தான். கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், நதிநீர் இணைப்பு போன்ற திட்டங்களுக்காக பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கி, அதற்கான ஏற்பாடுகளை செய்வோம் என்று கூறினார்.
தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் கூறியுள்ள ஆண்டுக்கு 72 ஆயிரம் வழங்கும் திட்டம் குறித்து பதில் அளித்த மோடி, காங்கிரஸ் இதற்கு முன் சொன்னதை செய்ததா? என மக்கள் சிந்தித்துப் பார்த்தாலே இதற்கான விடை கிடைத்து விடும் என்றார்.