அடுத்த மாதம் 19-ந் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ள திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பார்கள் பட்டியலை அக் கட்சியின் தலைவர் கமலஹாசன் அறிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய 4 தொகுதிகளில் வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நாளை மாலையுடன் நிறைவடைகிறது. திமுக, அதிமுக, அமமுக, நாம் தமிழர் கட்சி ஆகியவை வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்திலும் இறங்கி விட்டன. இந்நிலையில் இந்த 4 தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை அக்கட்சித் தலைவர் கமலஹாசன் அறிவித்துள்ளார்.
அதன்படி,
திருப்பரங்குன்றம் – பி.சக்திவேல்,
சூலூர் – ஜி. மயில்சாமி,
அரவக்குறிச்சி – எஸ். மோகன்ராஜ்,
ஒட்டப்பிடாரம் – எம். காந்தி
ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று கமலஹாசன் அறிவித்துள்ளார்.